Breaking News

அதிமுக வழக்குரைஞரணி ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அணியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கே.எம்.எஸ். பீர்முகைதீன் தலைமை வகித்தார். கட்சியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை ந. கணேசராஜா, பகுதிச் செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் பி.எச். மனோஜ்பாண்டியன், சுதா கே. பரமசிவன், வழக்குரைஞர் அணியின் இணைச் செயலர் பி. மணிகண்டன், துணைத் தலைவர் டி. ஜெனி, கட்சியின் சார்பு அமைப்பின் நிர்வாகிகள் கே.ஜெ.சி. ஜெரால்டு, நான்குனேரி இ. நடராஜன், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.கே. சீனிவாசன், மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழுத் தலைவர் கே. மாதவன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, தூத்துக்குடி சின்னத்துரை, வழக்குரைஞர்கள் ராஜேஸ்வரன், அபுதாஹீர், சீவலமுத்து, செல்வ ஆண்டனி, மோகன்ராஜ், சி. பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வழக்குரைஞரணி மாவட்டச் செயலர் வி.டி. திருமலையப்பன் வரவேற்றார். வழக்குரைஞர் பி. பரமசிவன் நன்றி கூறினார்.

நன்றி:  தினமணி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply