திசையன்விளை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து திசையன்விளையில் அனைத்து கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி ஜேம்ஸ்ரோடு, பேரூராட்சி அலுவலகம், மெயின்பஜார், பழைய பேரூந்து நிலைய ஜங்சன், போஸ்ட்ஆபீஸ், பால்கனி மருத்துவமனை ரோடு, பேரூந்து நிலையம், உடன்குடிரோடு வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அப்துல்கலாம் பற்றிய நினைவுகளுடன் இரங்கல் கூட்டம் நடந்தது. ஊர்வலத்தில் சமாரியா தூயயோவான் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி, ஸ்டெல்லா மாரீஸ் பள்ளி, ஜெயராஜேஷ் பள்ளி, வி.வி பொறியியல் கல்லூரி ஆகிய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சர்வ கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினகரன்
