Breaking News

தட்டார்மடம் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

தட்டார்மடம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

court-judgment-of-life-imprisonment-for-murdering-his-wife_thisyanvilai.com

கட்டிட காண்டிராக்டர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் சுதாகர் (வயது 33), கட்டிட காண்டிராக்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (25) என்பவருக்கும் கடந்த 29-05-13 அன்று திருமணம் நடந்தது. சுதாகருக்கு அவருடைய அத்தை மகளுடன் பழக்கம் இருந்து வந்தது.

அதே நேரத்தில் சூரியகாந்தி செல்போன் வாங்கி கேட்ட போது, சுதாகர் மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கொலை

கடந்த 07-07-13 அன்று சுதாகர், தனது மனைவி சூரியகாந்தியை சாமிதோப்பு கோவிலுக்கு காரில் அழைத்து சென்றார். காரை சுதாகர் ஓட்டினார். அவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது வள்ளியூரில் ஒரு கடையில் பழம் வாங்கினார். அப்போது ஒரு கத்தியும் சேர்த்து வாங்கி உள்ளார். தொடர்ந்து கார் தட்டார் மடம் அருகே திசையன்விளை ரோட்டில் வந்தது. அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திய சுதாகர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மனைவி சூரியகாந்தியை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.

பின்னர் காரை அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் மீது மோதவிட்டு விபத்து நடந்தது போன்று நாடகமாடினார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜசேகர் குற்றம் சாட்டப்பட்ட சுதாகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சந்திரசேகர் ஆஜர் ஆனார்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply