Breaking News

திருச்செந்தூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த மனு விவரம்:
திருச்செந்தூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாலைகள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தூத்துக்குடி-திருச்செந்தூர், கன்னியாகுமரி-திருச்செந்தூர், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலைகளின் இணைப்பு பகுதிகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
முருகன்குறிச்சி- பிச்சிவிளை-சீர்காட்சி- உடன்குடி சாலை, திருச்செந்தூர்- மெஞ்ஞானபுரம் சாலை, உடன்குடி – பரமன்குறிச்சி சாலை, பரமன்குறிச்சி – காயாமொழி – திருச்செந்தூர் இணைப்புச் சாலை, நாசரேத்- மூக்குப்பேரி – குரும்பூர் சாலை ஆகியவை மிகவும் பழுதான நிலையில் உள்ளன.
மேலும், தென்திருப்பேரை- குரங்கணி- ஏரல் சாலை, உடன்குடி – படுக்கப்பத்து- பெரியதாழை சாலை, குரும்பூர் – வெள்ளக்கோவில் சாலை, உடன்குடி – திசையன்விளை சாலை, மெஞ்ஞானபுரம் – முதலூர் சாலை, சோனகன்விளை – பூச்சிக்காடு- காயாமொழி சாலை, பிச்சிவிளை – நா.முத்தையாபுரம்- திருச்செந்தூர் இணைப்புச் சாலை, ஆத்தூர்- புன்னக்காயல் சாலை, திருச்செந்தூர் – ஆத்தூர் சாலை, காயாமொழி – கச்சினாவிளை சாலை, சேதுக்குவாய்த்தான் – தெற்கு ஆத்தூர் சாலை, அடைக்கலாபுரம் – ராணி மகாராஜபுரம் சாலை ஆகியவையும் பழுதான நிலையில் காணப்படுகின்றன.
கூர்ந்தான்விளை சாலை, வன்னிமாநகர் சாலை, நாகன்யாபுரம்- மூலக்கரை சாலை, மெஞ்ஞனைபுரம் – வாத்தியார் குடியிருப்பு சாலை, வரன்டியல் சாலை ஆகியவையும் பழுதான நிலையில் காணப்படுவதால் சாலைகளை புதுப்பித்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி  : தினமணி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply