Breaking News

பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்

சனி, ஜூன் 06,2015

தண்ணீரில் மூழ்கி சாவு

 

பரப்பாடியில் கல்குவாரி

 

சாய் லோகநாதன்-தண்ணீரில் மூழ்கி பிளஸ்–2

பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பிளஸ்–2 மாணவர் இறந்தார். தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

பிளஸ்–2 மாணவர்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், உடன்குடி சாலையில் எம்.எல். ஆஸ்பத்திரி தெரு சமீபம் ஆர்.டி.பி. காம்பவுண்டில் வசித்து வருபவர் லட்சுமணன். திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் கார்த்திக் என்ற சுப்பிரமணியன் (வயது 21), திசையன்விளை தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். 2–வது மகன் சாய் லோகநாதன் (18), தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்–2 படித்து தேர்ச்சியும் பெற்று இருந்தார்.

இந்தநிலையில் பரப்பாடியில் இந்த மாத இறுதியில் கிறிஸ்தவ கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கான ஏற்பாடுகளை செய்ய சாய் லோகநாதன் திசையன்விளையில் உள்ள தனது நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் நேற்று பரப்பாடிக்கு வந்துள்ளார். மாலையில் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து பரப்பாடிக்கு தென்புறம் தாமரைகுளம் ஊருக்கு செல்லும் சாலையில் தனியார் கல்குவாரியில் உள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார்.

நீரில் மூழ்கினார்

இந்த கல்குவாரி சுமார் 200 அடிக்கு மேல் ஆழம் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் குளிக்க இறங்கிய சாய் லோகநாதன் திடீரென நீரில் மூழ்கினார். மற்ற நண்பர்கள் செய்வதறியாது அபயக்குரல் எழுப்பினார்கள். ஆனாலும் சாய் லோகநாதன் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ஐ.என்.எஸ். கப்பற்படை தள தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ஆழம் சுமார் 200 அடிக்கு மேல் இருப்பதாலும், இரவு நேரம் என்பதாலும் உடனே தண்ணீரில் வீரர்கள் இறங்கவில்லை. மீண்டும் காலை முதல் மீட்பு பணி நடக்கும் என கூறப்பட்டுள்ளது. பிளஸ்–2 மாணவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினத்தந்தி

மாணவனின் புகைப்படத்தை பகிர்ந்தவர்: சுரேஷ் கண்ணன், போலீஸ்

கல்குவாரியின் புகைப்படத்தை பகிர்ந்தவர்: ஜெயராஜ், முகநூல் தோழர்!

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply