Breaking News

திசையன்விளை மனோ கல்லூரி கட்டடப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திசையன்விளை மனோ கல்லூரியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
திசையன்விளையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார் வணிக வளாகத்தில் வாடகை இல்லாமல் இயங்கி வருகிறது.
இக்கல்லூரிக்கு சொந்தமாக கட்டடம் கட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் நந்தன் குளத்தில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி இருந்தார். இந்நிலையில் இன்பதுரை எம்.எல்.ஏ. முயற்சியால் கல்லூரி கட்டடப் பணிக்காக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியது. இதன் மூலம் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை இன்பதுரை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் ஒன்றியச் செயலர் அந்தோனி அமல ராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலர் ஜெயக்குமார், மனோ கல்லூரி முதல்வர் பிரேம் அரசன் ஜெயராஜ், கல்லூரி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் சுயம்புராஜன், தங்கையா கணேசன், சாந்தகுமார், குருநாதன், முருகையா, பயணிகள் நலச்சங்க தலைவர் சாலமோன் ஜவஹர், செயலர் பிரைட், பொருளாளர் வசந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நன்றி : தினமணி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply