Breaking News

குட்டத்தில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை பறிப்பு

திசையன்விளை

நகை பறிப்பு

குட்டம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி சரஸ்வதி(50). இவர் வீட்டையொட்டி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் கடையில் இருந்த போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு வாலிபர்கள் தண்ணீர் பாக்கெட் கேட்டுள்ளனர். சரஸ்வதி எடுத்துக் கொடுத்த போது ஒருவர் அவர் அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐந்தேகால் பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply