Breaking News

திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திசையன்விளை ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1992-93ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் 57 பேர், அவர்களுக்கு பயிற்றுவித்த 14 ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் 40 பேர் மற்றும் பள்ளி ஊழியர்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு லட்டு வழங்கினர்.

தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களின் கடந்த கால நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

விழா மலரை பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் வெளியிட முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசுந்தரபாண்டியன் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் ஜோதிகுமார் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் குமார், பிடிபி குரூப் ஆப் கம்பெனி பங்குதாரர் பொன்ராஜ் துரைப்பாண்டியன், முதுமொத்தன்மொழி எஸ்.எஸ்.கே. பைபர் இந்தியா லிமிடெட் கம்பெனி சேர்மன் சிவராமலிங்கம், பெட்டைக்குளம் காதர்மீரா சாகிபு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் செய்திருந்தனர்.

நன்றி: தினகரன்

 

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply