Breaking News

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செலாளர் இன்பதுரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர ஜெயலலிதா பேரவை ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்று பேசினார்.

digg-rally_admk_thisayanvilai.com

கூட்டத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. கலந்து கொண்டு, 3,068 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் தயாளகண்ணன், அரசு வக்கீல் பழனிசங்கர், திசையன்விளை நகர பஞ்சாயத்து துணை தலைவர் சுதாகர் பாலாஜி, நகர செயலாளர் சுடலைமணி, மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் அருண் புனிதன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாலன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வீரபாண்டியன், உறுமன்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply