Breaking News

சென்னை ‘டாமி’க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி

%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af
சென்னை ‘டாமி’க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி! ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி

சமீபத்தில் சென்னையில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், வேலூரில் குரங்கை உயிரோடு எரித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வாழும் தமிழகத்தில்தான் இந்த கல்யாண சுந்தரம் வாழ்கிறார் என்றால் மனிதநேயம் மரணிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை, அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். டிரைவரான இவர், செல்லமாக வளர்த்த நாய்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலியை இன்று செலுத்தினார். இதுகுறித்து கல்யாணசுந்தரம் கூறுகையில், ” சென்னை அசோக்நகரில் குடியிருந்தபோது கண்கூட முழிக்காத ஒரு நாய் குட்டியை எடுத்து வளர்த்தேன். அதற்கு ‘டாமி’ என்று பெயரிட்டோம். எனக்கு மூன்று ஆண் குழந்தைகள். நாலாவது மகனாக ‘டாமி’யை வீட்டில் உள்ள அனைவரும் கருதினோம். அதன் ஒவ்வொரு செயலும் எங்களை மிகவும் வெகுவாக கவர்ந்தது. 15 ஆண்டுகளாக எங்களில் ஒருவனாக ‘டாமி’ இருந்தது. இந்த சமயத்தில் என்னுடைய சொந்த ஊரான நெல்லை மாவட்டம், திசையன்விளை, அச்சம்பாடுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியெர்ந்தோம். அப்போது ‘டாமி’யையும் அங்கு அழைத்துச் சென்றோம். அங்கேயும் எல்லோருடனும் ‘டாமி’ பழகியது.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன். இந்த சமயத்தில் ‘டாமி’ திடீரென நவம்பர் 27-ம் தேதி இறந்து விட்டதாக வீட்டிலிருந்து எனக்கு போன் வந்தது. இதனால் கடும் மனம் வேதனை அடைந்தேன். என்னுடைய ஒரு மகனை இழந்ததைப் போல கருதினேன். சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும்வரை டாமியை அடக்கம் செய்ய வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தேன். உடனடியாக ‘டாமி’யின் உடலை, பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஊருக்கு சென்ற பிறகு ‘டாமி’க்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு என்னுடைய தோட்டத்தில் அடக்கம் செய்தேன்.

‘டாமி’, எங்களை விட்டுப் பிரிந்து ஓராண்டாகி விட்டது. இருப்பினும் எங்கள் மனதிலிருந்து அது மறையவில்லை. இதனால் ஓராண்டு கடந்த நிலையில் அதற்கு அஞ்சலி செலுத்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்தோம். உடனடியாக ‘எங்களிடம் பாசமாய் வாழ்ந்த செல்லப்பிள்ளை ‘டாமி’க்கு நினைவு நாள், நினைவுகளுடன் ஏ.எம்.கே. கல்யாணசுந்தரம்’ என்று ‘டாமி’யின் போட்டோவுடன் கூடிய நினைவு அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஓட்டினோம். அடுத்து அதை அடக்கம் செய்த இடத்தில் தேங்காய், பழம், மாலை ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினோம். இதில் என்னுடைய குடும்பத்தினர் மட்டுமல்ல, ஊர் மக்களும் கலந்து கொண்டனர். ‘டாமி’ இறந்தபிறகு அடுத்து இன்னொரு நாயை வளர்க்க மட்டும் ஏனோ மனமில்லை” என்றார் வருத்தத்துடன்.

பொதுவாக நாய் என்றாலே நன்றி என்று குறிப்பிடும் சூழ்நிலையில் செல்லமாக வளர்த்த ‘டாமி’யின் நன்றியை மறவாமல் அதற்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் இந்த கல்யாணசுந்தரம்.

நன்றி: விகடன்

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply