திசையன்விளை பேரூராட்சி பகுதியில் சுமார் 5 கி.மீ சுற்றளவில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 72 கம்பியில்லா இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
இதனை கலெக்டர், எஸ்.பி, எம்.பி துவக்கி வைத்தனர்.திசையன்விளை பகுதியில் போலீசுக்கு சவால் விடும் வகையில் கடந்த சில வருடங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனை தடுக்க வள்ளியூர் டி.எஸ்.பி தலைமையில், பேரூராட்சி தலைவர் சீனிவாசன் முன்னிலையில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேரூராட்சி சார்பில் நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.இதன்படி கேமரா பயன்பாட்டின் துவக்க விழா நேற்று காலை நேருஜி திடலில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். கண்காணிப்பு கேமரா பணியினை மனோஜ்பாண்டியன் எம்.பி, நெல்லை கலெக்டர் கருணாகரன், எஸ்.பி விக்ரமன், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் டி.எஸ்.பி பாலாஜி, பேரூராட்சி உதவி இயக்குநர் மரிய எல்சி, ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், மண்டல துணை தாசில்தார் கண்ணன், திட்ட அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் சித்திரைவேல், அலெக்ஸ், ஜான்சிராணி, மாரிமுத்து, இசக்கி, புஷ்பராணி, சுப்பையா, பொன்மணி நடராஜன், ராஜசெல்வி ராஜசேகர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் பாலன், இயக்குநர்கள் செல்வம், கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நிக்சன் விஜயகுமார், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், துணைத் தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து 100 சதவிகித தெருவிளக்கு அமைக்கும் பணியின் நிறைவாக 187 புதிய மின்கம்பங்கள் அமைத்தல் பணி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 12 வது வார்டில் சிமென்ட் சாலை அமைத்தல், 16வது வார்டில் ரூ.17 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைத்தல், ரூ.56 லட்சம் மதிப்பில் சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு கலெக்டர் கருணாகரன் அடிக்கல் நாட்டினார்.
நன்றி: தமிழ்முரசு
