திசையன்விளை:நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 975 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிக்க கூடாது, தொழில் பூங்கா தொடங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் இடதுசாரி தொழிற்சங்கத்தினர் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் தளபதி தலைமையில், வட்டார குழு உறுப்பினர் செல்லதுரை, வட்டார செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சந்திரசேகரன், வட்டார தலைவர்கள் வள்ளிநாயம், லட்சுமணன், மாதர் சங்கம் சார்பில் தங்கம், சங்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 71 பேர் உள்பட 174 பேரை தென்காசி போலீசார் கைது செய்தனர்.
தென்காசி எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.ஐ.சி. தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் அரிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க செயலாளர் முகைதீன் பிச்சை, ஆரியங்காவு வங்கி ஊழியர்கள் சார்பில் பாக்யலட்சுமி, மேரி, பிரின்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தென்காசி தலைமை தபால் அலுவலகம் முன்பு தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் சமுத்திர பாண்டியன், பாலகிருஷ்ணன், முத்துசாமி, யோசுவா, ஜெயக்குமார், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கோட்டை–அம்பை
செங்கோட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய சங்க வட்டார செயலாளர் தம்பிதுரை, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, இசக்கிமுத்து, சி.பி.ஐ. தாலுகா உதவி செயலாளர் சுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர். வல்லம் கிளைத்தலைவர் செல்லப்பா, தாலுகா உதவி செயலாளர் செல்வராஜ், தேன்பொத்தை தலைவர் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் மாரியப்பன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஹரிஹரன், ஏ.ஐ.ஒய்.எப். செயலாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய சங்க வட்டார தலைவர் பரமசிவன், விவசாய தொழிலாளர்கள் சங்க வட்டார தலைவர் கசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 84 பேரை குற்றாலம் போலீசார் கைது செய்தனர்.
தொழிற்சங்கத்தினரின் சாலைமறியல் போராட்டத்தையொட்டி செங்கோட்டை பஸ்நிலையத்தில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அம்பையில் நடந்த போராட்டத்துக்கு, மாநில விவசாய சங்க துணை தலைவர் பெரும்படையார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் சமுத்திரம், தலைவர் நமச்சிவாயம், மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் மைதீன் பிச்சை, மாவட்ட விவசாய சங்க செயலாளர் பரமசிவன் மற்றும் பலர் அம்பை பூக்கடை பஸ்நிறுத்தத்தில் இருந்து தாலுகா அலுவலகத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 19 பெண்கள் உள்பட 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் அம்பை சென்ட்ரல் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க மாவட்ட தலைவர் கணபதி ராமன் தலைமை தாங்கினார். தொழிற் சங்கங்களின் கூட்டுகுழு தலைவர் சுப்புராஜ், செயலாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூட்டா சங்க பேராசிரியர்கள் மோனி, மரகதசுப்பிரமணியன், சுடலையாண்டி, சிதம்பரநாதன், அரசு ஊழியர் சங்கம் ராஜகோபால், பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க அம்பை கிளை செயலாளர்கள் மருதையா, சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி–திருவேங்கடம்
சிவகிரி பஸ்நிலையம் அருகே ஸ்டேட் வங்கி முன் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, அகில இந்திய விவசாயிகள் சங்க வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்லையா, தமிழ்நாடு விவசாய சங்க தமிழ் மாநில குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கவேலு, நெல்லை மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க வட்டார செயலாளர் கருப்பையா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் மார்க்ஸ் மாரியப்பன், தாலுகா தலைவர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர்கள் கதிரேசன், வேலு, சமுத்திரம், வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மொத்தம் 44 பெண்கள் உள்பட 215 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களை சிவகிரி போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம் பஜாரில் நடந்த போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் நல்லசாமி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ரத்தினவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். குருவிகுளம் ஒன்றிய விவசாயிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, சங்க நிர்வாகிகள் வேணு கோபால், சுப்புராஜ், கோபால், கைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகி பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் 16 பெண்கள் உள்பட 73 பேர் கலந்துகொண்டனர். அவர்களை திருவேங்கடம் போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி–வள்ளியூர்
நாங்குநேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், கணேசன், பாலசுந்தரம், யோவான் ஆகியோர் தலைமையில் நாங்குநேரி தாலுகா விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 64 பெண்கள் உள்பட மொத்தம் 168 பேர் ரெயில் மறியலுக்கு ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். அவர்களை நாங்குநேரி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கல்யாணிகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கலைமுருகன், சி.ஐ.டி.யூ. கோட்ட தலைவர் பார்வதிகுமார், இந்திய கம்யூனிஸ்டு வள்ளியூர் நகர செயலாளர் வேம்பு சுப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மாயகிருஷ்ணன் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 95 பேரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை காமராஜர் பஸ்நிலைய பகுதி மற்றும் மன்னார் ராஜா கோவில் பஸ்நிறுத்தம் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்ட இருந்த ஆட்டோக்கள் ஓடவில்லை.
நன்றி: தினத்தந்தி
