திசையன்விளை, : நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் அதிமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும், ராதாபுரம் தொகுதியில் நடந்துள்ள வளர்ச்சி பணிகளை விளக்கியும் திசையன்விளை பழைய பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலன், நகர செயலாளர் சுடலைமணி, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சாமுவேல், மாவட்ட கவுன்சிலர் வீரபாண்டி, நகர அவைத் தலைவர் பால்சாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் தயாளகண்ணன், ராஜசேகர், மாவட்ட பிரதிநிதிகள் முகமது அலி, செல்வன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குமாரபலவேசம், இசக்கி, பனைவெல்ல கூட்டுறவு சங்க துணை தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன் வரவேற்றார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநர் கண்ணன் தொகுத்து வழங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் வக்கீல் இன்பதுரை, மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட பஞ். தலைவர் நாராயணபெருமாள், மாவட்ட ஜெ பேரவை செயலாளர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஜாண்செல்வின், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினர். 9 வார்டு செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
நன்றி: தினகரன்
