Breaking News

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்

திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்

ஆண்டுக்கு 8 மாதங்கள் வருவாய் தரும் இப்பகுதியில் விளையும், யாழ்ப்பாணம், குரூஸ், அழகி செடி ரக முருங்கைக்காய்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரக முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. தினசரி 80 டன்களுக்கு மேல் திசையன்விளை மொத்த வியாபாரக் கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது.

இவைகள் தரம் பிரிக்கப்பட்டு 5 கிலோ, 10 கிலோ எடையில் அட்டைபெட்டிகளில் அடைக்கப்பட்டு குவைத், சவுதிஅரேபியா, மஸ்கட், துபாய், லண்டன், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. 4 மாதங்கள் ஏற்றுமதி நடைபெறும் என முருங்கைக்காய் மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்றுமதி தொடங்கியுள்ளதால் முருங்கைக்காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக விவாசயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நன்றி: மாலைமலர்

தொடர்புக்கு: 8883433349

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply