Breaking News

திசையன்விளையில் தமாகா ஆலோசனை கூட்டம்

திசையன்விளை, : ராதாபுரம் வட்டாரம் மற்றும் திசையன்விளை நகரம் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை தலைவர் புஷ்பலெட்சுமி கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சுயம்புராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி ராம்பாபு கலந்து கொண்டு பேசினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அமீர்கான், மாநில இணை செயலாளர் நவமணி, மாவட்ட பொறுப்பாளர் தங்கையா கணேசன் ஆகியோர் பேசினர். செப்.12ல் தமாக தலைவர் வாசன் கலந்து கொள்ளும் திருநெல்வேலி தமாக தேசிய திருவிழா நிகழ்ச்சியில் ராதாபுரம் வட்டாரம் சார்பில் ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நடராஜன், சரஸ்வதி, வட்டார தலைவர் ஆபிரகாம், பிரகாஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் லாரன்ஸ், சதீஷ், வட்டார பொறுப்பாளர் பிரபு, நகர துணை தலைவர் சக்திவேல், அமிர்தலிங்கம், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ராஜன் நன்றி கூறினார்.

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply