Breaking News

திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் குத்துவிளக்கால் தாக்கி புதுப்பெண் படுகொலை கொலையாளியை போலீஸ் தேடுகிறது

திசையன்விளை:

திசையன்விளை அருகே புதுப்பெண் கொலையில் 6 வாலிபர்கள் சிக்கினர்

வீட்டில் தனியாக இருந்த திருமணமாகி 3 மாதங்களே ஆன புதுப்பெண் குத்துவிளக்கால் அடித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளார். திசையன்விளை அருகே நடந்துள்ள இந்த படுகொலையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

புதுப்பெண்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வடிவம்மன்பட்டியைச் சேர்ந்தவர் குப்பா நாயக்கர். இவருடைய மனைவி சீதை அம்மாள். இவர்களுக்கு முத்துமாரி என்ற பாப்பா(வயது22) மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இதில் முத்துமாரிக்கும், அதே ஊரில் உள்ள நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ்(23) என்பவருக்கும் 29.6.15ந் தேதி திருமணம் நடந்தது. சுரேஷ் திருச்செங்கோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதே ஓட்டலில் தான் முத்துமாரியின் சகோதரர்கள் இருவரும் தொழிலாளி பணியாற்றி வருகின்றனர்.

வெளியூரில் கணவர்
திருமணத்துக்கு முன்பு முத்துமாரி வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சுரேஷ் திருச்செங்கோடுக்கு வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு முத்துமாரி பெற்றோர் வீட்டி இருந்து வந்து உள்ளார். விடுமுறையில் ஊருக்கு வரும் சுரேஷ் மனைவியை சந்தித்து விட்டு செல்வாராம்.

நேற்று(செவ்வாய்க்கிழமை) காலையில் முத்துமாரியின் தந்தை குப்பா நாயக்கர் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவரது மனைவி சீதை அம்மாள் கிராமத்திலுள்ள கண்மாயில் 100 நாள் திட்டத்தில் வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்
பெற்றோர் வீட்டில் முத்துமாரி தனியாக இருந்து உள்ளார். மாலை சுமார் 4 மணியளவில் வேலை முடிந்து சீதை அம்மாள் வீட்டு வந்து உள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் ரத்த வெள்ளத்தில் முத்துமாரி அலங்கோலமாக பிணமாக கிடந்து உள்ளார். தலை உருக்குலைந்து காணப்பட்டு உள்ளது. அருகில் ரத்தக்கறை படித்த நிலையில் குத்துவிளக்கு கிடந்து உள்ளது. அந்த குத்துவிளக்கால் மர்மநபர் முத்துமாரியை அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். வீட்டில் இருந்த டி.வி. பலத்த சப்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீதை அம்மாள் கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்கு திரண்டு வந்து பார்த்தனர். ஊரின் மையப்பகுதியில் சிறிது சப்தம் கூட கேட்காத நிலையில், முத்துமாரி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

தலை உருக்குலைந்த நிலையில் கிடந்த முத்துமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை தீவிரம்
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வடிவம்மன்பட்டியில் வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் முத்துமாரி இருந்து உள்ளார். இந்த ஊரில் பகல் நேரத்தில் பெரும்பாலான வீட்டில் இருக்கும் ஆண்களும், பெண்களும் வயல் வேலைக்கு சென்று விடுவர். இதனால் மதியத்தில் ஊரில் ஆட்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருக்கும்.

நேற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தான் முத்துமாரி வீட்டில் வைத்து குத்துவிளக்கால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சிறிது கூட முத்துமாரியன் சப்தம் கேட்காத வகையில் மர்மநபர் படுகொலையை அரங்கேற்றி உள்ளார். நகைக்காக முத்துமாரி படுகொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இதனால், முத்துமாரியின் வீட்டுக்கு அறிமுகமான நபர் தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வீட்டுக்கு, பக்கத்து கிராமமான சிங்காரதோப்பைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் பெரும்பாலும் பகல் நேரத்திலேயே வந்து சென்றுள்ளார். அந்த நபர் மற்றும் கணவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஊரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண் குத்துவிளக்கால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply