Breaking News

களக்காடு அருகே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

 

பெருமாள்குளம் சேகரகுரு சாமுவேல் பீட்டர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மனுவேல் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.மனோஜ்பாண்டியன் எம்.பி அடிக்கல் நாட்டி பேசுகையில், ‘கடந்த 6 ஆண்டுகளில் 40 பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன்’ என்றார். இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜ், தொலை தொடர்புதுறை ஆலோசனைக் குழு உறுப்பினர் டென்சிங் சுவாமி தாஸ், வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து, கிளை செயலாளர் அந்திரேயா, ரூபன் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply