Breaking News

திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் ரூ.1.19 கோடியில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா

ஜூலை 14, 2015

திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் ரூ.1.19 கோடியில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா

திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் மனோஜ்பாண்டியன் எம்.பி. நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.சி. தொடக்கப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, நகரப்பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.70 லட்சத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு மற்றும் தார் சாலை, சிமெண்டு ரோடு அமைப்பது, ரூ.15 லட்சம் செலவில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் திசையன்விளையில் இருந்து முருகேசபுரம் வரை குடிநீர் குழாய் மற்றும் இரும்பு மூடி அமைத்தல் உள்பட ரூ.1 கோடியே 19 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா திசையன்விளை உலக ரட்சகர் தெருவில் நடந்தது. திசையன்விளை நகரப்பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள் முன்னிலை வகித்தார். மனோஜ்பாண்டியன் எம்.பி. கலந்துகொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை, இட்டமொழி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் டென்சிங் சுவாமிதாஸ், கவுன்சிலர்கள் இசக்கி, சித்திரைவேல், ராஜசெல்வி, சுப்பையா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் பாலன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், 2–வது வார்டு செயலாளர் அருள்ராஜ், தொடக்க கூட்டுறவு சங்க இயக்குனர் செல்வன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் வைத்தியலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply