Breaking News

Recent Posts

தமிழகத்தில் முதன்முறையாக திசையன்விளை பேரூராட்சியில் 5 கி.மீ சுற்றளவில் 72 கண்காணிப்பு கேமராக்கள்

திசையன்விளை பேரூராட்சி பகுதியில் சுமார் 5 கி.மீ சுற்றளவில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 72 கம்பியில்லா இணைப்புடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.   இதனை கலெக்டர், எஸ்.பி, எம்.பி துவக்கி வைத்தனர்.திசையன்விளை பகுதியில் போலீசுக்கு சவால் விடும் வகையில் கடந்த சில வருடங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதனை தடுக்க வள்ளியூர் டி.எஸ்.பி தலைமையில், பேரூராட்சி தலைவர் சீனிவாசன் முன்னிலையில் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட …

Read More »

திசையன்விளை:நெல்லை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; ஆர்ப்பாட்டம் பெண்கள் உள்பட 975 பேர் கைது

திசையன்விளை:நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 975 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறிக்க கூடாது, தொழில் பூங்கா தொடங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை …

Read More »

திசையன்விளையில் சுடலை ஆண்டவர் கோவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, நேற்று மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மஞ்சள்பெட்டி ஊர்வலம் திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள், சமய சொற்பொழிவு, பல்சுவை கலை போட்டிகள், இன்னிசை கச்சேரி, நாடகம், மாங்கல்ய பூஜை, குத்துவிளக்கு …

Read More »

களக்காடு அருகே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.   பெருமாள்குளம் சேகரகுரு சாமுவேல் பீட்டர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மனுவேல் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.மனோஜ்பாண்டியன் எம்.பி அடிக்கல் நாட்டி பேசுகையில், ‘கடந்த 6 ஆண்டுகளில் 40 பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கீடு …

Read More »

திசையன்விளையில் போலி சிம்கார்டுகள் புழக்கம் அதிகரிப்பு

சைபர் கிரைம் போலீசாருக்கு சவால் திசையன்விளையில் போலி சிம் கார்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் மாணவிகள், குடும்ப பெண்கள், சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக போலி சிம்கார்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. பிரபல நிறுவனங்கள் தங்களது விற்பனை பிரதிநிதிகளுக்கு சிம் கார்டுகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கின்றனர். இதற்காக கவர்ச்சிகரமான பரிசுகளும், …

Read More »