திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில், உறுப்புக் கல்லூரி மாணவர்கள் 1,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளான திசையன்விளை, சேரன்மகாதேவி, புளியங்குடி, சங்கரன்கோவில், நாகபட்டி மற்றும் கடையநல்லூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம், நாகலாபுரம் உறுப்புக் கல்லூரிகளில் பயின்ற மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பல்கலைக் கழக துணை வேந்தர் கி. பாஸ்கர், மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினார். உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு முதல் முறையாக பல்கலைக் கழகத்தில் வைத்து பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பல்கலைக் கழக பதிவாளர் ஆ. ஜான் டி பிரிட்டோ, தேர்வாணையர் ச. பிரபாகர், உறுப்புக் கல்லூரிகளின் இயக்குநர் ஆ. சுருளியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி
