Breaking News

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

power-cut-places_thisayanvilai.com

நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பணகுடி, கடையநல்லூர், வள்ளியூர், களக்காடு, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி மற்றும் திசையன்விளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழ்கண்ட ஊர்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது.

நாளை
விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலார், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆலடியூர், ஆம்பூர், பாப்பான்குளம், அடையகருங்குளம் ஆகிய பகுதிகளிலும்,

இதே போல் பணகுடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை மற்றும் வள்ளியூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தெற்கு வள்ளியூர் மற்றும் டி.பி ரோடு, நம்பியான்விளை மற்றும் பக்கத்து கிராமங்களிலும் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

23–ந் தேதி
கடையநல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துக்கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், வேலாயுதபுரம், பொய்கை, ஊர்மேல் அழகியான் மற்றும் நயினாரகரம் ஆகிய கிராமங்களுக்கு 23–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மின்கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் மின்வாரிய பணியாளர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

25–ந் தேதி
வள்ளியூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் 25–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இதே போல் களக்காடு, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி, திசையன்விளை துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கோதைச்சேரி, வண்ணியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, குமாரபுரம், நவ்வலடி, ஆத்தங்கரைபள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் 25–ந் தேதி மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வினியோக செயற்பொறியாளர்கள் வீ.புலமாடன் (கல்லிடைக்குறிச்சி), அ.கிருஷ்ணன் (வள்ளியூர்), இரா.விஜயன் (கடையநல்லூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்