Breaking News

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

thuukku_suicide_thiayanvilai.com

திசையன்விளை அருகே உள்ள கூடுதாழையைச் சேர்ந்தவர் ரா. ரமேஷ் (40). கட்டடத் தொழிலாளியான இவரது மூத்த மனைவி 4 குழந்தைகளுடன் பிரிந்து தூத்துக்குடியில் வசித்து வருகிறாராம். இதையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைபிறப்பு கிராமத்துக்கு வந்த ரமேஷ், தட்டார்மடத்தைச் சேர்ந்த மேரி (28) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம். ரமேஷ் தினமும் மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததால் அவரை மனைவி மேரி கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி: தினமணி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்