Breaking News

நெல்லை அருகே பயங்கர சம்பவம்: சென்னை வாலிபர் தலை துண்டித்து கொலை

திசையன்விளை: நெல்லை அருகே தலையை துண்டித்து சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம், இட்டமொழி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் (27). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக், ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர் தனது நண்பர் கிருபாகரனுடன் (29) பைக்கில் சுப்பிரமணியபுரத்திலிருந்து இட்டமொழிக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் பெட்டிக்கடை முன்பு பைக்கை நிறுத்தி சிகரெட் வாங்கினார். அப்போது காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், கார்த்திக்கை சரமாரியாக வெட்டியது.

இதில் தலை துண்டாகி அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தடுக்க முயன்ற கிருபாகரனுக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. தகவலறிந்ததும் வள்ளியூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த கிருபாகரனை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையான கார்த்திக்கின் தந்தை நடராஜன், இட்டமொழி பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர். இவர் மீது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த தொம்மை என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.

இந்நிலையில் 2004ல் கோயில் கொடை விழாவில் நடராஜனுக்கும், கொலையான தொம்மையின் உறவினர் ராமன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ராமன் தரப்பினர், அப்போது இட்டமொழி பஞ்சாயத்து துணைதலைவராக இருந்த நடராஜனை அங்குள்ள மெயின்பஜாரில் வைத்து வெட்டிக்கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக 2014ல் தொம்மையின் பேரன் பாலமுருகனை நடராஜன் மகன்கள் கார்த்திக், பொன்குமார் ஆகியோர் வெட்டிக்கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக தற்போது கார்த்திக் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுெதாடர்பாக 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் இட்டமொழி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி : தினகரன்

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்