Breaking News

குறிப்புகள்

திசையன்விளையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 18 பேர் மீது வழக்கு

திசையன்விளை: இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய மோகன் சி.லாசரசை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் திசையன்விளை நேரு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, திசையன்விளை நகர பொதுச்செயலாளர் கணேச மூர்த்தி, நகர தலைவர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜன், விஸ்வ இந்து பரி‌ஷத் மாநில செயற் குழு உறுப்பினர் முருகையா, நகர செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி …

Read More »

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திசையன்விளை, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்த கணபதி பாண்டியன் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் இவருடைய மனைவி கவிதா சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் சந்தோஷ்ராஜாவுக்கு ஆறுமுகநேரியை சேர்ந்த முருகன் மகன் ராதாகிருஷ்ணனின் ரியல் …

Read More »

கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை- ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திசையன்விளை அருகே கூலிப்படையை ஏவி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது …

Read More »

விபத்தில் மூளைசாவு அடைந்த மாணவனின் சிறுநீரகம்- கல்லீரல் 2 பேருக்கு பொருத்தப்பட்டது

திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பனைவிளையைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மாணிக்கவல்லி. இவர்களுடைய மகள்கள் ஞான ஜெயனி, ரீட்டா, மகன்கள் கிருஷ்ண பெருமான், கோபிகிருஷ்ணன் (வயது 16). இதில் கோபிகிருஷ்ணன் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார் அவர், கடந்த 26-ந்தேதி திசையன்விளையில் இருந்து உவரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், …

Read More »

திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திசையன்விளை: திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் கட்டம் போட்ட லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் …

Read More »

திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்

திசையன்விளை, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார். திசையன்விளை தாலுகா நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களை பிரித்து, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திசையன்விளை புதிய தாலுகா வருகிற 25–ந்தேதியில் இருந்து செயல்படும் என்றும், திசையன்விளை குறுவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளை, அப்புவிளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், கரைச்சுத்துபுதூர், குட்டம், குமாரபுரம், கரைச்சுத்துஉவரி, கோட்டைக்கருங்குளம் …

Read More »

திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி சீலா ரகம் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்பனை

திசையன்விளை, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நெல்லை மாவட்டம் திசையன்விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சீலா மீன் கிலோ ரூ.200 முதல் ரூ.400–க்கு விற்கப்படுகிறது. மீன் மார்க்கெட் நெல்லை மாவட்டம் திசையன்விளை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ராமேசுவரம், தூத்துக்குடி, மணப்பாடு, உவரி, பெரியதாழை ஆகிய ஊர்களில் இருந்தும் மீனவர்கள் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவர். திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார …

Read More »

திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை வாலிபர் கைது

திசையன்விளை, திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். முதியவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை நாடார் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). அவருடைய மகன் கோபாலகிருஷ்ணன். இவர் திசையன்விளை பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். தினமும் மதிய வேளையில் சாப்பாட்டுக்காக மகனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நடராஜன் கடையில் அமர்ந்து இருப்பது வழக்கம். அதுபோல் நேற்று மதியமும் …

Read More »

மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் இனிக்காத நாடோடி வாழ்க்கை! திருவிழா வியாபாரிகள் கவலை

குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க நாடோடி வாழ்க்கை வாழ்ந்து இனிப்பு பொருள்களை தயாரித்து மக்களுக்கு விநியோகித்தாலும், மூலப்பொருள்களின் கடும் விலையேற்றத்தால் தங்களது வாழ்க்கை இனிக்காத சூழலிலேயே உள்ளதாக திருவிழா வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், தர்கா விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம். காரச்சேவு, இனிப்புச்சேவு, பூந்தி, லட்டு ஆகியவை மட்டுமன்றி “ஏணி மிட்டாய்’ என அழைக்கப்படும் சீனி, கருப்புக்கட்டி மிட்டாய்கள் …

Read More »

திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திசையன்விளை, திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன்– கார் மோதல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே …

Read More »