Breaking News

திசையன்விளையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 18 பேர் மீது வழக்கு

திசையன்விளை:

இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசிய மோகன் சி.லாசரசை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் திசையன்விளை நேரு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, திசையன்விளை நகர பொதுச்செயலாளர் கணேச மூர்த்தி, நகர தலைவர் விக்னேஷ், ராதாபுரம் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் ராஜன், விஸ்வ இந்து பரி‌ஷத் மாநில செயற் குழு உறுப்பினர் முருகையா, நகர செயலாளர் நாகராஜன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ரெங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ராஜா உள்பட 18 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிந்தனர்.

நன்றி : மலை மலர்

About Eesu

Check Also

உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை, உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். கப்பல் மாதா ஆலயம் …

மறுமொழியொன்றை இடுங்கள்