Breaking News

​இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக ஓரு வாழும் ‘அண்ணாமலை’..!

சென்னை துறைமுகத்தில் தினக்கூலியாக வேலை செய்தவர், இன்று 2500 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார், அவர் எப்படி இதனை சாதித்தார் என்பதனை சுருக்கமாக பார்ப்போம்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரு.எம்.ஜி.முத்து, ஏழ்மை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாததால், 1952ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் சாதாரண தினக்கூலி வேலை செய்பவராக தன் வாழ்க்கை தொடங்கினார் முத்து.

கப்பல்களில் வரும் சுமைகளை தூக்குதல், இறக்குதல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டு மிகவும் கஷ்ட ஜீவணத்தில் வாழ்க்கை நடத்தி வந்த முத்து, பல நாட்கள் கடும் பசியுடனே உறங்கி தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தைக் கொண்டு சிறிய அளவிலான தளவாடத் (Logistics) தொழிலை
துவங்கினார். வாடிக்கையாளர் சேவையையே தன் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டவர், தன் தொழிலில் மெல்ல மெல்ல பிரபலமடையத் துவங்கினார்.

பின்நாளில், தன் சிறந்த தொழில் திறமையால் பெரிய வணிகங்கள் கிடைக்கப்பெற்று சென்னை முழுமைக்கும், ஏன், நாடு முழுமைக்கும் தெரிந்த பெயரானது எம்.ஜி.முத்துவின் நிறுவனமான MGM Groups.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய Logistic நிறுவனமாக உயர்ந்துள்ள MGM Group, லாஜிஸ்டிக் மட்டுமல்லாது நிலக்கரி மற்றும் கணிமத் தொழில், உணவுச் சங்கிலி தொழில், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், என வரிசையாக தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

மலேசிய உணவு நிறுவனமான marry Brown-ன், இந்திய உரிமை MGM நிறுவனமே வாங்கியது, சமீபத்தில் பெங்களூருவில் பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றினையும் திறந்துள்ளது. சமீபத்தில் குளிர்பான நிறுவனம் ஒன்றினை MGM நிறுவனம் வாங்கியுள்ளது என Kenfolios நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.

ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்பட்டவர், தனது தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் தனது வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்கிறார் எம்.ஜி.முத்து என்றால் மிகையாகாது..

சென்னையில் உள்ள மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான MGM Dizee world, முத்து அவர்களுக்கு சொந்தமானதே என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : 7 செய்தி தமிழ்

About Eesu

Check Also

திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் முத்தையா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகாரில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முத்தையா ஜாதிய …

Leave a Reply