Breaking News

நிகழ்வுகள்

அனைத்துவிதமான தினசரி நிகழ்வுகள் உங்களுக்காக!

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செலாளர் இன்பதுரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர ஜெயலலிதா பேரவை ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. …

Read More »

பக்தர்களைக் காக்கும் பாலா திரிபுரசுந்தரி : கொம்மடிக்கோட்டை

அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பணகுடி, கடையநல்லூர், வள்ளியூர், களக்காடு, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி மற்றும் திசையன்விளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழ்கண்ட ஊர்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது. நாளை விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலார், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, …

Read More »

திசையன்விளையில் தேசிய அளவிலான கபடி போட்டி: சென்னை அணிக்கு கோப்பை பரிசு

திசையன்விளையில் நடந்த தேசிய அளவிலான மின்னொளி கபடி போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை அணிக்கு கோப்பை பரிசு வழங்கப்பட்டது. மின்னொளி கபடி போட்டி முதல்–அமைச்சர் ஜெயலலிதா 68–வது பிறந்த நாளையொட்டி, நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான ஆண், பெண்கள் மின்னொளி கபடி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் …

Read More »

நெல்லை மாவட்டத்தில், இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை மின்நிலையங்கள் வன்னிக்கோனேந்தல், மூலைக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், கரந்தானேரி, களக்காடு, கூடங்குளம், கோட்டைக்கருங்குளம், நவ்வலடி, திசையன்விளை, கயத்தாறு, பாளையங்கோட்டை, மேலக்கரை, அம்பாசமுத்திரம், கரிசல்பட்டி, ராதாபுரம், பெத்தரங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரம், மற்றும் பக்கத்து கிராமங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வன்னிக்கோனேந்தல், …

Read More »

குளத்து நீர் வெளியேறி சாலையில் தேக்கம்: பெரியதாழை – திசையன்விளை சாலை துண்டிப்பு

சாத்தான்குளம் அருகே குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கியதால், பெரியதாழை – புத்தன்தருவை, திசையன்விளை செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையிலிருந்து செட்டிவிளை, அதிசய மணல் மாதா ஆலயம், புத்தன்தருவை வழியாக திசையன்விளை செல்லும் சாலை உள்ளது. சடையனேரி கால்வாய் மற்றும் கருமேனி ஆற்று படுகை மூலம் புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் வந்து, தற்போது குளம் நிரம்பி வருகிறது. குளத்துக்கரை வலுவில்லாமல் காணப்படுவதால் வெளியாகும் தண்ணீர் …

Read More »

திசையன்விளை கோல்டு ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் விழா திசையன்விளை கோல்டு ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் கணேசன் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சுயம்பு ஈஸ்வரி, துணை முதல்வர் சுகாசினி, தலைமை ஆசிரியர் திவ்யா ஆகியோர் செய்து இருந்தனர். நன்றி: தினத்தந்தி

Read More »

தாது மணல்: கலால் வரி விலக்கு அளிக்க பரிசீலிக்கும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு தாது மணலுக்கான கலால் வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கீரைக்காரன்தட்டுப் பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு, கலால் வரி ஆணையர் 2014 டிசம்பர் 24இல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2011 மார்ச் 1 முதல் 2014 மார்ச் 31 வரை மேற்படி நிறுவனம் எடுத்துள்ள தாது …

Read More »

மழை ஓய்ந்த பிறகும் வடியாத வெள்ளம் தண்ணீரில் மூழ்கிய மணிநகர் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு; 20 கிராம மக்கள் தவிப்பு

கருமேனியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மணிநகர் தரைப்பாலத்தை முழ்கடித்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சுமார் இருபது கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். அண்மையில் பெய்த மழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரி குளம், தாங்கை குளம் ஆகிய குளங்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. தாங்கைகுளத்தின் உபரிநீர் கருமேனியாற்றில் கலந்து மணிநகர் தரைப்பாலம் வழியாக மணப்பாடு கடலில் கலக்கிறது. இந்நிலையில், கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தண்ணீர் தடைபட்டு தேங்கும்நிலை ஏற்பட்டுள்ளதால், மணிநகர் பகுதியிலுள்ள …

Read More »

தலைமறைவான திசையன்விளை இட்டமொழி சுவிஷேசபுரத்தைச்சேர்ந்த திருமணபு ரோக்கர் ஜான் இன்பராஜ்

ஆசிரியை, நர்ஸ் உள்ளிட்ட 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னன் புதுக்கோட்டையில் பிடிபட்டார். தலைமறைவான புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தபால், தந்தி காலனி 4வது தெருவைச்சேர்ந்த ரத்தினசாமி மகள் எஸ்தர்பாலா(38). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவரது கணவர் 2010ம் ஆண்டு இறந்துவிட்டதால் இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் …

Read More »