Breaking News

நிகழ்வுகள்

அனைத்துவிதமான தினசரி நிகழ்வுகள் உங்களுக்காக!

தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

திசையன்விளை அருகே தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை, திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் சேக்தாவூத் (வயது 43). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 18.7.17-ந் தேதி சமையல் வேலையை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பழனி …

Read More »

மணல் கடத்தலை அம்பலப்படுத்தியதால் எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் வாசலில் விஷம் குடித்த வாலிபர் சாவு

திசையன்விளை: திசையன்விளையில் மணல் கடத்தல் விவகாரத்தை அம்பலப்படுத்திய வாலிபர், எஸ்ஐ தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தையான அதிமுக பிரமுகர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்(65). அதிமுக முன்னாள் நகர செயலாளர். இவரது மகன் ஜெனிபர்(33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். ஜெனிபர் மீது கடந்த 3ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர், …

Read More »

மழை எச்சரிக்கை: பாதிப்புகளைத் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்

அதிக மழை பெய்யும் என வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: அதிக மழை எச்சரிக்கை மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக். 7) மிகமிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள …

Read More »

கனமழை எச்சரிக்கை எதிரொலி தயார் நிலையில் 17 கண்காணிப்பு குழுக்கள் கலெக்டர் ஷில்பா பேட்டி

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நெல்லை மாவட்டம் முழுவதும் 17 கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் ஷில்பா கூறினார். நெல்லை, கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நெல்லை மாவட்டம் முழுவதும் 17 கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் ஷில்பா கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– கனமழை எச்சரிக்கை நெல்லை மாவட்டத்தில் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் புதிதாக திசையன்விளை தாலுகா உதயம்

திசையன்விளை, நெல்லை மாவட்டத்தில் 16-வது தாலுகாவாக, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள நவ்வலடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி புதிய தாலுகா …

Read More »

திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார்

திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். திசையன்விளை, திசையன்விளை புதிய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டார். புதிய தாலுகா இன்று உதயம் நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிதாக தனி தாலுகா இன்று (வியாழக்கிழமை) உதயமாகிறது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி …

Read More »

திசையன்விளை அருகே பயங்கரம் காதல் தகராறில் வாலிபர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது

திசையன்விளை, திசையன்விளை அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வாலிபர் பிணம் நெல்லை மாவட்டம் திசையன்விளை மின்வாரிய அலுவலகம் அருகே கல்வெட்டான்குழி பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த திசையன்விளை மற்றும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வாலிபர் உடல் கிடந்த பகுதி தூத்துக்குடி மாவட்ட …

Read More »

வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கை இலை

திசையன்விளை நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக அளவு விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக்காய்கள் விமானம் மூலம் துபாய், ஓமன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கை இலைகளுக்கும் மவுசு கூடியுள்ளது. அதாவது, முருங்கை இலைகளும் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே …

Read More »

கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டம்: மீனவ மக்கள் புறக்கணிப்பு உவரியில் பரபரப்பு

உவரியில் நேற்று நடைபெற இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டத்தை மீனவ மக்கள் புறக்கணித்து வெளியேறினர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திசையன்விளை,    கருத்து கேட்பு கூட்டம்  நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை சார்பில், நெல்லை மாவட்டத்திற்கான 9 முதல் 13 வரையிலான வரைபடங்கள் மற்றும் அதை சார்ந்த கடற்கரை மண்டல வகைகள் வரைவு, …

Read More »

அதிமுக வழக்குரைஞரணி ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அணியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கே.எம்.எஸ். பீர்முகைதீன் தலைமை வகித்தார். கட்சியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை ந. கணேசராஜா, பகுதிச் செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் பி.எச். மனோஜ்பாண்டியன், சுதா கே. பரமசிவன், வழக்குரைஞர் …

Read More »