Breaking News

மயில் கூட்டத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் எங்கு பார்த்தாலும் வறட்சியாக காணப்பட்டதாலும், நிலங்களில் பயிர் விளைச்சல் இல்லாததாலும் மயில்கள் உணவு தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன.
xஇந்நிலையில் மழை காரணமாக கிராமப்புறப் பகுதிகளில் அதிகளவில் பயிர் விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மயில்கள் மீண்டும் கிராமப்புர பகுதிகளை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளன.

ஏராளமான மயில்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் பொதுமக்களும், குழந்தைகளும் இதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

நன்றி : EENADU INDIA எங்கும் தமிழ்

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்