Breaking News

திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண்குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Near-Thisayanvilai-Crematorium-rescued-the-girl_thisayanvilai.com

இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

சுடுகாட்டில் குழந்தை
திசையன்விளை அருகே உவரி அண்ணாநகர் கடற்கரை சுடுகாட்டில் நேற்று முன்தினம் 2 வயது பெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது. தகவல் அறிந்த உவரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு நெல்லை குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த குழந்தை யார்? சுடுகாட்டில் அநாதையாக விட்டுச் சென்ற பெற்றோர் யார்? என உவரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்

தினத்தந்தி செய்தி எதிரொலி
இந்த குழந்தையின் புகைப்படத்துடன் நேற்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த முட்டம் பகுதியைச் சேர்ந்த சிலர், குழந்தையின் புகைப்படத்தை அடையாளம் பார்த்து தந்தையான குமாருக்கு தகவல் கொடுத்தனர். பதறிப்போன அவர் உவரி போலீஸ் நிலையத்துக்குச் சென்று தனது குழந்தை தான் என குமார் தெரிவித்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகின. குமரி மாவட்டம் இறைச்சிகுளத்தைச் சேர்ந்தவர் குமார். கட்டிடத் தொழிலாளி. இவருக்கும் குட்டத்தைச் சேர்ந்த பானுப்பிரியா(வயது21)வுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுடைய குழந்தை தான் சுடுகாட்டில் அநாதையாக விடப்பட்ட 2 வயது ராதிகா.

கள்ளத் தொடர்பு பிரச்சினை
இவர்கள் குடும்பத்துடன் உவரி அருகில் உள்ள புத்தன் தருவையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். பானுப்பிரியாவுக்கும் சில வாலிபர்களுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை குமார் கண்டித்து வந்தபோதும், பானுப்பிரியா கள்ளத் தொடர்பை நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினமும் இப்பிரச்சினையில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குமார் வேலைக்குச் சென்ற பின், வீட்டிலிருந்து பானுப்பிரியா குழந்தையுடன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை
இந்த நிலையில் குழந்தை சுடுகாட்டில் அநாதையாக திரிந்துள்ளது. இது தொடர்பாக வெளியூரில் இருந்த பானுப்பிரியாவின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு உவரி போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பானுப்பிரியாவுக்கு போலீசார் உத்தரவிட்டனர். தொடர்ந்து அவரிடம் போனிலும், குமாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்