Breaking News

நிகழ்வுகள்

அனைத்துவிதமான தினசரி நிகழ்வுகள் உங்களுக்காக!

போலீசாரிடமிருந்து இருமுறை தப்பியவர் திருச்செந்தூரில் சிக்கினார்

ஜூலை 10, 2015 போலீசாரிடம் இருந்து இருமுறை தப்பி சென்ற மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர், திருச்செந்துார் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.திருச்செந்துார் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த இளைஞர் ஒருவரை விசாரித்தனர். விசாரணையில் தெரியவந்ததாவது: மதுரை நாமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் மகன் சத்தியகுமார் என்ற சிவா,23, என தெரியவந்தது. திருச்செந்துார் கோயில் …

Read More »

‘பெற்றோருக்காக கல்யாணம், காதலுக்காக நீ…!’ -கைப்பந்து வீரரின் இரட்டை சவாரி ஆசை!

ஜூலை 9, 2015 சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா தன்னுடைய காதலனும், கைப்பந்து வீரரும், வங்கி மேலாளருமான நவீன் மீது சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜிடம் கொடுத்த புகார் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதற்கு காவல்துறை உயரதிகாரிகளின் தலையீடும், அரசியல் செல்வாக்கே காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பிரியங்காவுக்கு உதவிய துணை நடிகை இதுகுறித்து பிரியங்காவுக்கு உதவிய சமூக சேவகியும், துணை நடிகையுமான எமி கூறுகையில், “நவீன்- பிரியங்கா …

Read More »

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புக்கு உயிர்!

05, ஜூலை 2015 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அரசின் சாதனை பட்டியலில் சேர்க்கும் வகையில், தாமிரபரணி – -நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்; திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதுமான நீராதாரங்கள் இல்லை. எனவே, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கன்னடி யன் அணைக்கட்டை புனரமைத்து, அதன் கால்வாயை, …

Read More »

வீராங்கனையை காதலித்து ஏமாற்றிய வங்கி அதிகாரி கைது

ஜூலை 3, 2015 பெங்களூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது26). சர்வதேச கைப்பந்து வீராங்கனையான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டக்கோட்டையை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப் (28) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இவரும் சர்வதேச கைப்பந்து வீரர். கடந்த 6 ஆண்டுகளாக நவீனும் பிரியங்காவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நவீன் தன்னை திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரியங்கா …

Read More »

வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய முயற்சி கணவர் வீட்டில் பட்டதாரி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா

செவ்வாய், ஜூன் 30,2015 வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சித்ததால், கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தனது கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கணவன்–மனைவி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆர்.சி.நந்தன்குளத்தைச் சேர்ந்தவர், அந்தோணி ராயப்பன். அவருடைய மகன் அந்தோணி அமலன் (வயது 34). தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை அருகே உள்ள சின்னராணிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகள் ரோஸ்லின் (25). பட்டதாரி. அந்தோணி …

Read More »

பழைய கார் விற்பனையாளரை கொல்ல முயற்சித்த த.மா.கா. பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை, இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் நிறுவனத்தில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் திடீரென அங்கு நின்ற 17 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சேர்மத்துரையை அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி …

Read More »

திசையன்விளையில் பரபரப்பு பழைய கார் விற்பனையாளரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி 17 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு

திசையன்விளையில் பழைய கார் விற்பனையாளரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சித்தது. 17 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவம் திசையன்விளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– அரிவாள் வெட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கோடீசுவரரான இவர் நேற்று …

Read More »

தட்டார்மடம் அருகே பா.ம.க. நிர்வாகியின் கடை சூறை: 4 பேருக்கு வலைவீச்சு

தட்டார்மடம் அருகே உள்ள மணி நகரை சேர்ந்தவர் முத்துராமபாண்டியன். இவரது மகன் கண்ணன். இவர் சாத்தான்குளம் ஒன்றிய பா.ம.க. துணை செயலாளராக உள்ளார். இருவரும் மணிநகர் மெயின் பஜாரில் கடை வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. அதனை பிச்சி குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். குத்தகை காலம் முடிந்ததும் மணிகண்டனிடம் இருந்து மீண்டும் தோட்டத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில் மணிகண்டன் மீண்டும் தோட்டத்தை …

Read More »

பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்

சனி, ஜூன் 06,2015     பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பிளஸ்–2 மாணவர் இறந்தார். தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– பிளஸ்–2 மாணவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில், உடன்குடி சாலையில் எம்.எல். ஆஸ்பத்திரி தெரு சமீபம் ஆர்.டி.பி. காம்பவுண்டில் வசித்து வருபவர் லட்சுமணன். திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். …

Read More »

பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர் தூத்துக்குடி மாவட்ட பாஜ துணைத் தலைவராக உள்ளார். இவர் தன் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தட்டார்மடம், சாத்தான்குளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார். மேலும் அவரை கண்டித்து பாஜ சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ராபிசனுக்கும், செல்வராஜிக்கும் பிரச்னை …

Read More »