ராதாபுரம் வியாழன் , மே 14,2015:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் நேற்று முதல் மீண்டும் மின்பத்தி தொடங்கியது.
கோளாறு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில், தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலாவது அணு உலையில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் கோளாறை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து அணுஉலையில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது.
மீண்டும் மின் உற்பத்தி
இந்த நிலையில் நேற்று காலை 6.40 மணி அளவில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது, 400 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து 750 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினத்தந்தி
