Breaking News

மிக இளம்வயது வேட்பாளரை நெல்லை மாவட்டத்தில் களமிறக்கிய அதிமுக- பயோடேட்டா

நயினார் நாகேந்திரன்

nayinaar_nagenthran_thisayanvilai.com
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ல் போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் பதவிகளை வகித்தவர்.

செல்வமோகன்

selvamogan_aiadmk_thisayanvilai.com
தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ். செல்வமோகன் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். 1989- முதல் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2010 முதல் தென்காசி தொகுதி செயலர், 2011 முதல் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து வருகிறார்.

முருகையாபாண்டியன்

murugaiyapandiyan_aiadmk_thisayanvilai.com
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர். முருகையாபாண்டியன் (வயது 70) நிறுத்தப்பட்டுள்ளார். 1991-ல் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலராக பதவி வகித்தவர்.

மனோகரன்

manoharan-vasudevanallur_aiadmk_thisayanvilai.com
வாசுதேவநல்லூர்(தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக அ. மனோகரன் (வயது 37) அறிவிக்கப்பட்டுள்ளார். விஸ்வநாதப்பேரி அதிமுக கிளைச் செயலர், மாநகர் மாவட்ட ஜெ. பேரவை துணைத் தலைவராக பதவி வகித்தவர்.

எப்சி கார்த்திகேயன்

efsi_karthikeyan_alangulam_aiadmk_thisayanvilai.com
ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளராக எப்சி கார்த்திகேயன் (வயது 45) நிறுத்தப்பட்டுள்ளார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக 2 முறை பதவி வகித்தார். 2002-ல்தான் அதிமுகவில் சேர்ந்தார். தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

இன்பதுரை
ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக இன்பதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திசையன்விளை நவ்வலடியைச் சேர்ந்தர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்

ராஜலெட்சுமி

rajalakshmi-sankarankovil_aiadmk_thisayanvilai.com
சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளராக வி.எம். (வயது 30) நியமிக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 18வது வார்டு இளம்பெண்கள் பாசறை செயலராக இருந்தார். 2015-ல் நகர அதிமுக இணைச்செயலரானார். 2014ஆம் ஆண்டு முதல் சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவராக இருந்து வருகிறார்.

ஷேக்தாவூத்

sheik-dawood_aiadmk_thisayanvilai.com
கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஷேக்தாவூத் (வயது 61) நிறுத்தப்பட்டுள்ளார்.

விஜயகுமார்

vijayakumar-nanguneri_aiadmk_thisayanvilai.com
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர்களாக விஜயகுமார் (வயது 45) அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது நாங்குநேரில் ஒன்றியச் செயலராக இருக்கிறார். இவரது தந்தை மாணிக்கராஜ் 2001-2006ல் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். இவரது மனைவி அதிமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலர்.

நன்றி: ஒன் இந்தியா

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன