தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் என திசையன்விளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். பொதுக்கூட்டம் திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேருஜி கலையரங்கில் நடந்தது. ராதாபுரம் தொகுதி தலைவர் ஜெரால்டு வீரசந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்திரை வேல் வரவேற்றார். ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லொபினை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் …
Read More »திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை
1. நீர் ஆதாரங்களில் உள்ள நீரைத் தனியார் குளிர்பான நிறுவனங்கள் பயன்படுத்துவது மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 2. திசையன்விளை பகுதிக்குத் தாமிரபரணி தண்ணீர் கொண்டுவரப்படும். 3. திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறு – ஜம்புநதி நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும். 4. இராமாநதி மேல்மட்டக்கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். 5. மணிமுத்தாறு – தெற்கு மெயின் ரீச் கால்வாய் – திருக்குறுங்குடி நம்பியாறு இணைப்புத் …
Read More »கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திசையன்விளை அருகே உள்ள கூடுதாழையைச் சேர்ந்தவர் ரா. ரமேஷ் (40). கட்டடத் தொழிலாளியான இவரது மூத்த மனைவி 4 குழந்தைகளுடன் பிரிந்து தூத்துக்குடியில் வசித்து வருகிறாராம். இதையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைபிறப்பு கிராமத்துக்கு வந்த ரமேஷ், தட்டார்மடத்தைச் சேர்ந்த மேரி (28) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம். ரமேஷ் தினமும் மது அருந்தி வந்து வீட்டில் …
Read More »உவரி நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
உவரி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தை சில மீட்டர் தொலைவுக்கு விரிவுப்படுத்தக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். கூடங்குளம் அணுஉலை வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.49 கோடி செலவில் உவரி கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தூண்டில் வளைவு பாலமானது, கப்பல் மாதா ஆலயத்தின் இருமருங்கிலும் முறையே 400 மற்றும் 1,800 மீட்டர் நீளத்தில் அமையும் வகையில் பணிகள் மும்முரமாக …
Read More »திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண்குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை
திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:– சுடுகாட்டில் குழந்தை திசையன்விளை அருகே உவரி அண்ணாநகர் கடற்கரை சுடுகாட்டில் நேற்று முன்தினம் 2 வயது பெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது. தகவல் அறிந்த உவரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு நெல்லை குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த குழந்தை …
Read More »விஜயகாந்தை நம்பி வாக்களியுங்கள் ! வள்ளியூரில் பிரேமலதா பிரசாரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை நம்பி வாக்களித்தால் தமிழ்நாட்டில் 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் பிரேமலதா விஜயகாந்த். ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சிவனனைந்த பெருமாளை ஆதரித்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் கூறியதாவது: தொகுதி முன்னேற்றமடைய வேண்டும், தொகுதி மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நடைபெறுகிறது. …
Read More »கட்சித் தலைமைக்கு புகார்கள் குவிந்ததால் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்
அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது இத் தொகுதிக்கு வேட்பாளராக சென்னையில் வசிக்கும் உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக மைக்கேல் ராயப்பன் உள்ளார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணியில் இருந்த அவர், சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அதையடுத்து இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப …
Read More »தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை: உதயகுமாரன்
தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை என பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் உதயகுமாரன் கூறினார். பச்சைத் தமிழகம் கட்சியின் சார்பில் ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதன் தலைவர் சுப. உதயகுமாரன், தேர்தல் அறிக்கைக்கு பதிலாக வாக்காளர்களுக்கு தேர்தல் ஒப்பந்தத்தை வெளியிட்டார். திருநெல்வேலியில் இன்று அவர் வெளியிட்ட ஒப்பந்த விவரம்: தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன். யாரிடமிருந்தும் எந்தக் காரணத்துக்காகவும், எந்தவிதத்திலும் கையூட்டு …
Read More »தட்டார்மடம் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
தட்டார்மடம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கட்டிட காண்டிராக்டர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் சுதாகர் (வயது 33), கட்டிட காண்டிராக்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (25) என்பவருக்கும் கடந்த 29-05-13 அன்று திருமணம் நடந்தது. சுதாகருக்கு அவருடைய அத்தை மகளுடன் பழக்கம் இருந்து வந்தது. அதே …
Read More »திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலம்
அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் அவதாரபதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழா அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதாரபதியில், அய்யா வைகுண்டர் அவதார தின விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. …
Read More »