Breaking News

ragavan

தாது மணல்: கலால் வரி விலக்கு அளிக்க பரிசீலிக்கும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு தாது மணலுக்கான கலால் வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கீரைக்காரன்தட்டுப் பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு, கலால் வரி ஆணையர் 2014 டிசம்பர் 24இல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2011 மார்ச் 1 முதல் 2014 மார்ச் 31 வரை மேற்படி நிறுவனம் எடுத்துள்ள தாது …

Read More »

மழை ஓய்ந்த பிறகும் வடியாத வெள்ளம் தண்ணீரில் மூழ்கிய மணிநகர் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு; 20 கிராம மக்கள் தவிப்பு

கருமேனியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மணிநகர் தரைப்பாலத்தை முழ்கடித்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சுமார் இருபது கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். அண்மையில் பெய்த மழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரி குளம், தாங்கை குளம் ஆகிய குளங்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. தாங்கைகுளத்தின் உபரிநீர் கருமேனியாற்றில் கலந்து மணிநகர் தரைப்பாலம் வழியாக மணப்பாடு கடலில் கலக்கிறது. இந்நிலையில், கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தண்ணீர் தடைபட்டு தேங்கும்நிலை ஏற்பட்டுள்ளதால், மணிநகர் பகுதியிலுள்ள …

Read More »

தலைமறைவான திசையன்விளை இட்டமொழி சுவிஷேசபுரத்தைச்சேர்ந்த திருமணபு ரோக்கர் ஜான் இன்பராஜ்

ஆசிரியை, நர்ஸ் உள்ளிட்ட 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னன் புதுக்கோட்டையில் பிடிபட்டார். தலைமறைவான புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தபால், தந்தி காலனி 4வது தெருவைச்சேர்ந்த ரத்தினசாமி மகள் எஸ்தர்பாலா(38). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவரது கணவர் 2010ம் ஆண்டு இறந்துவிட்டதால் இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் …

Read More »

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், …

Read More »

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், …

Read More »

நதியை எப்போதும் அநீதியால் அடைக்க முடியாது

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று பசுமை யானது. தாமிரபரணி தரும் செழிப்பு அது. மற்றொன்று ரத்தச் சிவப்பு. தேரி நிலங்களாக விரியும் சிவப்புப் பாலை அது. பசுமை விளையாதத் தரிசு அது. ஒரு பக்கம் ஓடும் ஆற்றில் கையில் அள்ளி தண்ணீர் குடிக்கிறார்கள். மறுபக்கம் நிலத்தடியை ஆழத் தோண்டினாலும் மணல்தான் மிஞ்சு கிறது. இயற்கையின் வினோதங்களில் இதுவும் ஒன்று. திருநெல்வேலியின் நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடியின் …

Read More »

திசையன்விளையில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திசையன்விளை, : நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் அதிமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும், ராதாபுரம் தொகுதியில் நடந்துள்ள  வளர்ச்சி பணிகளை விளக்கியும் திசையன்விளை பழைய பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலன், நகர செயலாளர் சுடலைமணி, …

Read More »

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்

திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 8 மாதங்கள் வருவாய் தரும் இப்பகுதியில் விளையும், யாழ்ப்பாணம், குரூஸ், அழகி செடி ரக முருங்கைக்காய்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரக முருங்கைக்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. தினசரி …

Read More »

மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு பொதுமக்கள் மறியல்; போலீஸ் குவிப்பு

மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி தெய்வகனி. இவர்களது மகன்கள் லெட்சுமணன்(11), ராமு(10), மகள் காத்திகா(8). ஜெயமுருகன் சென்னையில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். குழந்தைகள் தெய்வக்கனியின் பராமரிப்பில் உள்ளனர்.லெட்சுமணன் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார். தாங்கை பண்டாபுரம் …

Read More »

திசையன்விளையில் தமாகா ஆலோசனை கூட்டம்

திசையன்விளை, : ராதாபுரம் வட்டாரம் மற்றும் திசையன்விளை நகரம் சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மோகன்குமாரராஜா தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணை தலைவர் புஷ்பலெட்சுமி கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சுயம்புராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி ராம்பாபு கலந்து கொண்டு பேசினார். …

Read More »