கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றார் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவரும், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை. நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஐ.எஸ். இன்பதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் அ. மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம், ஜெயங்கொண்டான் ராமஜெயலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். …
Read More »தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்
தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை தெரிவித்தார். நதி நீர் இணைப்பு திட்டம் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு …
Read More »வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக ரெய்டு: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: வைகுண்ட ராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வைகுண்டராஜனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் தாது மணல் விற்பனையை தொழிலதிபர் வைகுண்டராஜன் செய்து வந்தார். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகளில் அரசு …
Read More »தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத் தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாநில தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன். திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ரூ. 2.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பாண்டியராஜன் ஞாயிற்றுக்கிழமை அருங்காட்சியகத்திற்கு வந்தார். மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அமைச்சரை வரவேற்றார். அருங்காட்சியகத்திலுள்ள …
Read More »பாஜக நிர்வாகிகள் நியமனம்
பாஜக மாவட்டச் செயலராக பாளைங்கோட்டையைச் சேர்ந்த சி.ஜெயசித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்டத் தலைவர் அ.தயாசங்கர் வெளியிட்ட அறிக்கை: பாஜகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளத்தைச் சேர்ந்த எஸ்.மோகனசுந்தரி, மாவட்டச் செயலராக பாளையங்கோட்டை சி.ஜெயசித்ரா, திசையன்விளை மண்டல தலைவராக எஸ்.கே.தர்மராஜு ஆகியோர் கோட்ட பொறுப்பாளர் சி.தர்மராஜ் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.. நன்றி : தினமணி
Read More »விசாகபட்டினம் வழியாக, தடையை மீறி விவி மினரல்ஸ் சட்ட விரோத தாது ஏற்றுமதி.. வருமான வரித்துறை பகீர்
சென்னை: தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கீரைக்காரன்தட்டு என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது விவி மினரல்ஸ். இதன் தலைவர், வைகுண்டராஜன். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் அள்ளி, அதிலிருந்து தாதுக்களைப் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பல லட்சம் கோடிகளை சம்பாதித்து வந்தது …
Read More »முறைகேடான முதலீடு புகார்: வி.வி.குழும நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை: 100 இடங்களில் நடைபெற்றது
எழும்பூரில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வி.வி.மினரல்ஸ் குழும நிறுவனத்தின் பெரு வணிக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார். முறைகேடான லாபத்தில் கிடைத்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வி.வி. குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை, சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், காரைக்கால், ஆந்திர மாநிலம் உள்பட 100 இடங்களில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் …
Read More »விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான விவி மினரல்ஸ்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. …
Read More »விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை... 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை
விவி மினரல்ஸ் : சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ளது விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகம். இந்த நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். விவி மினரல்ஸ் வருமான வரித்துறை சோதனை : கடந்த …
Read More »விவி மினரல்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் ஐடி ரெய்டு!
தமிழகத்தைச் சேர்ந்த 4 மணல் ஏற்றுமதி நிறுனங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர் தமிழகத்தைச் சேர்ந்த 4 மணல் ஏற்றுமதி நிறுனங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 100 இடங்களுக்கு மேல் இந்த ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக தாது மணலை ஏற்றுமதி செய்ததாகவும், வெளிநாடுகளில் முறைகேடாக பண முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூஸ் …
Read More »