Breaking News

Recent Posts

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி:10 வயது சிறுவன் பரிதாப பலி

உடுமலை;உடுமலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். இதில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்கேசவன், 43; பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலன்பட்டியில், பலகாரக்கடை கடை நடத்தி வருகிறார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், உடுமலையைச் சேர்ந்த சுதாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார்.உடுமலை ஏரிப்பாளையத்தில் குடியிருந்து வரும் இவர்களுக்கு, 10 மற்றும் ஆறு வயதில் …

Read More »

திருச்செந்தூரில் புதிய கட்சி தொடக்கம்

அகில இந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்க விழா திருச்செந்தூரில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன். அ.திமு.க. பிரமுகரான இவர் அக்கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான சனிக்கிழமை திருச்செந்தூரில், அகில இந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கி கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் …

Read More »

திசையன்விளையில் போலீஸை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திசையன்விளையில் கல்லூரி மாணவரை தாக்கியதாக, போலீஸாரை கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். திசையன்விளை தனியார் கல்லூரியில் 3 ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவர் ஜெகதீஸ். இவர், நண்பர்களான சக்திகுமார், கண்ணன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை தடுத்த நிறுத்த முயன்றனராம். அவர்கள் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீஸார் கம்பால் அடித்தனராம். இதில், நிலை தடுமாறி …

Read More »

நிறைமாத கர்ப்பிணியின் இறப்புக்கு நீதி விசாரணை- இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை: திசையன்விளை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கும்பிகுளம் நடுவூரை சேர்ந்தவர் மாலினி. இவர் பிரசவத்திற்காக கடந்த 3-ம் தேதி திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து நெல்லை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதைடுத்து, …

Read More »

நெல்லை அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்யும் கிராமம்!

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுற்றுபுதூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பனை ஓலைகளால் ஆன கைவினைப் பொருட்களை தயாரித்து வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, 1964-ம் ஆண்டு அந்த கிராமத்தில் அரசு மூலம் பனை ஓலை பொருட்கள் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் பெண்களுக்கு இலவச பயிற்சியும், நாள் ஒன்றுக்கு ரூ.1 சம்பளமாகவும் வழங்கப்பட்டுள்ளது. …

Read More »