Breaking News

Recent Posts

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி’ நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி‘ என்று நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிரசாரம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 16 தொகுதிகளில் அவர் வேன் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார். நேற்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார …

Read More »

சுடுமண்ணை வாயில் திணித்து கணவர் துன்புறுத்தியதாக பெண் புகார்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (29). இவரது மனைவி சங்கீதா(26). இவர்களுக்கு 13.9.2007-ல் திருமணம் நடைபெற்றது. துர்காதேவி(8), ராஜதேவிகா(7), முத்துசந்தோஷ்(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் ரமேஷ்குமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத் தகராறு இருந்து வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி தனது கணவர் தன்னை மிகவும் அடித்து, துன்புறுத்தியதாக வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்தில் சங்கீதா புகார் …

Read More »

மனதை செம்மையாக்கும் மனோன்மணீஸ்வரர் : விஜயநாராயணம்

விஜயநாரயணம் மனோன்மணீஸ்வர் ஆலயம் பஞ்ச கயிலாயத்தில் கடைசி க்ஷேத்ரமாக போற்றப்படுகிறது. கயிலையில் பார்வதி தேவி உலக நலத்திற்காகச் சிவபெருமானைத் தியானித்தார். தனது கையில் வைத்திருந்த 1008 தாமரைப் புஷ்பங்களை பூமியில் தூவினாள். அந்த புஷ்பங்களைச் சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடங்களெல்லாம் 1008 சிவக்ஷேத்ரங்களாக போற்றப்படுகின்றன. இதில் 74வது க்ஷேத்ரமாக மனோன்மணி என்னும் லிங்கம் அமைந்த விஜயநாராயணம் போற்றப்படுகிறது. …

Read More »

திசையன்விளையில் இளம்பெண் மாயம்

திசையன்விளை அருகே இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் பவானி(20). இவர் கடந்த 26ம் தேதி திசையன்விளையில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற பவானி பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கலாராணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் …

Read More »

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது லாரி, ஜேசிபி பறிமுதல்

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், எஸ்.ஐ.மதிபாலன் மற்றும் போலீசார் நம்பியாற்றில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட அணைக்கரையை சேர்ந்த எட்வின்(29), …

Read More »