Breaking News

Recent Posts

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திசையன்விளை அருகே உள்ள கூடுதாழையைச் சேர்ந்தவர் ரா. ரமேஷ் (40). கட்டடத் தொழிலாளியான இவரது மூத்த மனைவி 4 குழந்தைகளுடன் பிரிந்து தூத்துக்குடியில் வசித்து வருகிறாராம். இதையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைபிறப்பு கிராமத்துக்கு வந்த ரமேஷ், தட்டார்மடத்தைச் சேர்ந்த மேரி (28) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம். ரமேஷ் தினமும் மது அருந்தி வந்து வீட்டில் …

Read More »

உவரி நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

உவரி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தை சில மீட்டர் தொலைவுக்கு விரிவுப்படுத்தக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். கூடங்குளம் அணுஉலை வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.49 கோடி செலவில் உவரி கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தூண்டில் வளைவு பாலமானது, கப்பல் மாதா ஆலயத்தின் இருமருங்கிலும் முறையே 400 மற்றும் 1,800 மீட்டர் நீளத்தில் அமையும் வகையில் பணிகள் மும்முரமாக …

Read More »

திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண்குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

திசையன்விளை அருகே சுடுகாட்டில் மீட்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:– சுடுகாட்டில் குழந்தை திசையன்விளை அருகே உவரி அண்ணாநகர் கடற்கரை சுடுகாட்டில் நேற்று முன்தினம் 2 வயது பெண் குழந்தை அநாதையாக விடப்பட்டிருந்தது. தகவல் அறிந்த உவரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டு நெல்லை குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த குழந்தை …

Read More »

விஜயகாந்தை நம்பி வாக்களியுங்கள் ! வள்ளியூரில் பிரேமலதா பிரசாரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நம்பி வாக்களித்தால் தமிழ்நாட்டில் 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் பிரேமலதா விஜயகாந்த். ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சிவனனைந்த பெருமாளை ஆதரித்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் கூறியதாவது: தொகுதி முன்னேற்றமடைய வேண்டும், தொகுதி மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நடைபெறுகிறது. …

Read More »

கட்சித் தலைமைக்கு புகார்கள் குவிந்ததால் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்

அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட 4 நாட்களில் ராதாபுரம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது இத் தொகுதிக்கு வேட்பாளராக சென்னையில் வசிக்கும் உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.வாக மைக்கேல் ராயப்பன் உள்ளார். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணியில் இருந்த அவர், சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அதையடுத்து இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப …

Read More »