Breaking News

தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய திட்டக்குழு ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

ஐகோர்ட்டு

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி ராதாபுரம், திசையன் விளை, நாங்குநேரி, சாத்தான் குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தை, கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தை நான்கு கட்டமாக நிறைவேற்ற திட்டமிட்டு, ரூ.369 கோடியும் ஒதுக்கப்பட்டது. முதல் 2 கட்டப்பணிகள் முடிந்து விட்ட நிலையில், 3 மற்றும் 4–ம் கட்டப் பணிகளை மேற்கொள்ளாமல் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த திட்டத்தை நிறைவேற்றினால், நாங்குநேரி, திசையன்விளை, சாத்தன் குளம் உள்ளிட்ட பகுதியில் பெரும் நன்மை ஏற்படும். எனவே, விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்த திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு ஒரு அட்டவணையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ள கால அவகாசத்தின் அடிப்படையில், அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்துக்காக தமிழக அரசு அனுப்பும் ஒப்புதல் கடிதத்தை, மத்திய திட்டக்குழு விரைவாக பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அட்டவணையின் படி திட்ட நடவடிக்கையில் மேற்கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டாலோ, அல்லது கால அவகாசம் தேவைப்பட்டாலோ, இந்த ஐகோர்ட்டில் தமிழக அரசு நாடலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி: மாலைமலர்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்