மீன்பிடி தடைகாலத்தால் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் கருவாடுகளின் விலை அதிகரித்துள்ளது.
திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் இருந்து கருவாடுகள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கருவாடுகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி :- புதிய தலைமுறை தொலைக்காட்சி
