ஜூலை 11, 2015
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 65). இவர் அவரது சைக்கிளில் தட்டார்மடத்தில் இருந்து கொம்மடிக்கோட்டை நோக்கி சென்றார். அப்போது கொம்மடிக்கோட்டையில் இருந்து புத்தன்தருவைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த கிருஷ்ணன் மகன் நாதன் (19) என்பவர் அவரது சைக்கிளின் மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்த பிச்சைமணி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து நாதனை கைது செய்தார்.
நன்றி: தினத்தந்தி
