Breaking News

Recent Posts

திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை வாலிபர் கைது

திசையன்விளை, திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். முதியவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை நாடார் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). அவருடைய மகன் கோபாலகிருஷ்ணன். இவர் திசையன்விளை பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். தினமும் மதிய வேளையில் சாப்பாட்டுக்காக மகனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நடராஜன் கடையில் அமர்ந்து இருப்பது வழக்கம். அதுபோல் நேற்று மதியமும் …

Read More »

வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கை இலை

திசையன்விளை நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக அளவு விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் முருங்கைக்காய்கள் விமானம் மூலம் துபாய், ஓமன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது முருங்கை இலைகளுக்கும் மவுசு கூடியுள்ளது. அதாவது, முருங்கை இலைகளும் தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே …

Read More »

மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் இனிக்காத நாடோடி வாழ்க்கை! திருவிழா வியாபாரிகள் கவலை

குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க நாடோடி வாழ்க்கை வாழ்ந்து இனிப்பு பொருள்களை தயாரித்து மக்களுக்கு விநியோகித்தாலும், மூலப்பொருள்களின் கடும் விலையேற்றத்தால் தங்களது வாழ்க்கை இனிக்காத சூழலிலேயே உள்ளதாக திருவிழா வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், தர்கா விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம். காரச்சேவு, இனிப்புச்சேவு, பூந்தி, லட்டு ஆகியவை மட்டுமன்றி “ஏணி மிட்டாய்’ என அழைக்கப்படும் சீனி, கருப்புக்கட்டி மிட்டாய்கள் …

Read More »

நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திசையன்விளை அருகே நம்பியாற்றில் பைக்கில் மணல் கடத்துவதாக திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவ்வழியாக மணல் கடத்திய அணைக்கரையைச் சேர்ந்த குயின்ராஜ் (35), சேகர் (36) ஆகிய இருவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளையும் …

Read More »

கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டம்: மீனவ மக்கள் புறக்கணிப்பு உவரியில் பரபரப்பு

உவரியில் நேற்று நடைபெற இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டத்தை மீனவ மக்கள் புறக்கணித்து வெளியேறினர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திசையன்விளை,    கருத்து கேட்பு கூட்டம்  நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை சார்பில், நெல்லை மாவட்டத்திற்கான 9 முதல் 13 வரையிலான வரைபடங்கள் மற்றும் அதை சார்ந்த கடற்கரை மண்டல வகைகள் வரைவு, …

Read More »