Breaking News

‘பெற்றோருக்காக கல்யாணம், காதலுக்காக நீ…!’ -கைப்பந்து வீரரின் இரட்டை சவாரி ஆசை!

ஜூலை 9, 2015

வீராங்கனையை காதலித்து ஏமாற்றிய வங்கி அதிகாரி_1

சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா தன்னுடைய காதலனும், கைப்பந்து வீரரும், வங்கி மேலாளருமான நவீன் மீது சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜிடம் கொடுத்த புகார் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதற்கு காவல்துறை உயரதிகாரிகளின் தலையீடும், அரசியல் செல்வாக்கே காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

பிரியங்காவுக்கு உதவிய துணை நடிகை

வீராங்கனை வழக்கில் சமூக சேவகி  எமி

இதுகுறித்து பிரியங்காவுக்கு உதவிய சமூக சேவகியும், துணை நடிகையுமான எமி கூறுகையில், “நவீன்- பிரியங்கா ஆகியோரின் காதல் விவகாரம் எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் நவீனுக்கும் கோவை போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷின் மகளுக்கும் வரும் 13ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. நவீன் ஏமாற்றிய விவரத்தை என்னுடைய கவனத்துக்கு பிரியங்கா கொண்டு வந்தார். உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

சர்ச்சில் திருமண அறிக்கை வாசிப்பு

ஆனால், அவர்கள் திருமணத்தை நடத்துவதிலேயே குறியாக இருந்தனர். நவீன் குடும்பத்தினர் கிறிஸ்தவர்கள் என்பதால் சர்ச்சில் மூன்று முறை திருமண அறிக்கை வாசிக்க வேண்டும். அதில் ஒரு அறிக்கையையும் வாசித்து விட்டார்கள். சர்ச்சில் அறிக்கை வாசிக்கும் போது இந்த திருமணத்தை நடத்த நியாயமான தடைகள் இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக பாதிரியாரிடம் தெரிவிக்கலாம் என்று சொல்வது வழக்கம். அதன்படி நவீனை காதலித்ததை உரிய ஆவணத்துடன் சம்பந்தப்பட்ட பாதிரியாரிடம் பிரியங்கா எழுத்துப்பூர்வமாக கொடுத்தார். அப்படி இருந்தும் இரண்டாவது அறிக்கை வாசிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் பிரியங்கா வழக்கு

இதனால் வேறுவழியின்றி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பிரியங்கா திருமணத்தை நிறுத்த வழக்கு தொடர்ந்தார். பிறகு சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார். பிரியாங்காவிடம் அரை மணிநேரத்துக்கு மேல் கமிஷனரும் விசாரணை நடத்தினார். இதன்பிறகே பிரியங்காவின் வழக்கை தி.நகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை விசாரிக்க அவர் உத்தரவிட்டார். கிருஷ்ணமூர்த்தியும் பிரியங்காவிடம் விசாரணை நடத்தினார். பிறகு நவீனிடம் விசாரித்தார். அன்றைய தினம் நவீன் மற்றும் அவனது தரப்பினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்துக்கும் நவீனை காவலர்கள் அழைத்து சென்றனர். இந்த சமயத்தில் டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து ஒரு போன் வந்தது. உடனடியாக நவீன் விடுவிக்கப்பட்டார். இப்போது முன்ஜாமீன் கேட்டு நவீன் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது. இதற்கிடையில் திமுக முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது.

‘பெற்றோருக்காக கல்யாணம், காதலுக்காக அவள்’

வீராங்கனையை காதலித்து ஏமாற்றிய வங்கி அதிகாரி_3

காவல் நிலையத்தில் பிரியங்காவிடம் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது நவீன், அவளது கண்ணீரை துடைத்தான். பிறகு அவளை தொட்டு ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான். இதைப்பார்த்த எனக்கு ஆத்திரம் வந்தது. உடனே நவீனிடம், ‘பிரியங்காவை நீ திருமணம் செய்கிறாயா இல்லையா..?’ என்று கேட்டேன். அப்போது அவன், ஊரறிய கோவை பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்.

பிரியங்காவை என்னுடைய கேர்ள் பிரண்ட்டாக வைத்துக் கொள்கிறேன் என்றான். உடனே எனக்கு கோபம் வந்தது. ‘நான் இங்கே மாமா வேலை பார்க்கவா வந்து இருக்கிறேன்..?’ என்று கேட்டேன். இதன்பிறகு பிரியங்காவிடமிருந்து தள்ளியே இருந்தான் நவீன்.

நவீனை அடித்து வீடாதீர்கள்- பிரியங்காவின் பாசம்

வீராங்கனையை காதலித்து ஏமாற்றிய வங்கி அதிகாரி_4

விசாரணையின் போது, பிரியங்கா, நவீன் மீதுள்ள பாசத்தில், அவனை எதுவும் அடிக்க வேண்டாம், கைதும் செய்ய வேண்டாம். எனக்கும், அவருக்கும் திருமணம் செய்து வைத்தால் போதும் என்று கூறினாள். அந்தளவுக்கு பிரியங்கா நவீன் மீது காதல் பைத்தியமாக இருக்கிறாள். விசாரணை முடிந்த என்னுடைய வீட்டுக்கு வந்த பிரியங்கா, அன்றை தினம் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள். வாந்தியும் எடுத்தாள். ‘கர்ப்பமா…?’ என்று கேட்டதற்கு இல்லை என்றாள். அப்போது அவள் சொன்ன விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நவீனுக்கு மனைவியாக பிரியங்கா வாழ்ந்து இருக்கிறார். அப்போது எல்லாம் இருவருக்கு இடையே செக்ஸ் நடந்து இருக்கிறது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிக்காமலிருக்கும் வகையில் நவீன், பிரியங்காவிடம் செக்ஸ் வைத்து இருக்கிறார்.

நவீன் திருமணம் ரத்து

நானும் ஒரு விளையாட்டு வீராங்கனைதான். விளையாட்டு வீரர், வீராங்கனைக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஆனால் இப்போதுள்ள சிலருக்கு ஒழுக்கம் இல்லை. அதை சொல்லி கொடுக்கும் கோச்சுகளும் எதையும் கண்டுகொள்வதில்லை. இத்தகையவர்கள் இதுபோன்ற விவகாரத்தில் சிக்கி எதிர்கால வாழ்க்கையை கேள்விகுறியாக்கி விடுகிறார்கள். பிரியங்காவின் போராட்டத்தால் நவீனின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்ச்சில் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கவில்லை. திருட்டுத்தனமாக ரிஜிஸ்டர் மேரெஜ் செய்ய திட்டமிட்ட முயற்சியும் தோல்வியடைந்து விட்டது.

பிரியங்காவிடம் வரதட்சணையாக 300 சவரன், ஆடி கார், சென்னையில் ஒரு பங்களா வீடு என்று கேட்ட நவீனின் பெற்றோர், பிறகு எதற்காக பிரியங்காவை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. கோவை போலீஸ் உதவி கமிஷனரின் மகளையும் இரண்டே நாளில் பார்த்து திருமணத்துக்கு முடிவு செய்து இருக்கிறார்கள். நிச்சயம் பிரியங்காவின் உண்மை காதலை நவீன் ஒருநாள் புரிந்து கொள்வான்” என்றார்.

சட்டப்படி எதிர்கொள்வோம்- நவீன் தரப்பு

நவீன் தரப்பில் பேசியவர்கள், “சட்டப்படி இந்த பிரச்னையை எதிர்கொள்வோம். நவீன், பிரியங்காவை காதலித்தது உண்மை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதை தடுக்கவே எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது” என்றனர்.

வழக்கை விசாரித்த துணை கமிஷனர் சரவணன், “வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த விசாரணையில் நவீன், பிரியங்காவை காதலித்ததை ஒத்துக் கொண்டுள்ளான். இன்னும் பிரியங்காவிடம் விசாரணை நடத்த பெங்களூரு செல்ல உள்ளோம். விசாரணையில் எந்த உயரதிகாரிகள், அரசியல் தலையீடு எதுவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்” என்றார்.

வீரர், வீராங்கனைகளே வாழ்க்கை ஒரு விளையாட்டல்ல…!

-எஸ்.மகேஷ்

நன்றி: விகடன்

மேலும்:

தினகரன்

ஒன் இந்தியா

தி இந்து

தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்