Breaking News

ragavan

திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திசையன்விளை ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1992-93ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் 57 பேர், அவர்களுக்கு பயிற்றுவித்த 14 ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் 40 பேர் மற்றும் பள்ளி ஊழியர்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு லட்டு வழங்கினர். தொடர்ந்து …

Read More »

பைக் மீது வேன் மோதி 2 தலையாரிகள் பலி -திசையன்விளை

கூடங்குளம் அருகே பைக் மீது  வேன் மோதியதில்  2 தலையாரிகள் உடல் நசுங்கி பலியாகினர். நெல்லை  மாவட்டம் உவரியை சேர்ந்தவர் அருள்லிங்கம் (48). இவர் கூடங்குளத்தில்  தலையாரியாக வேலை பார்த்து வந்தார். இவரும், செட்டிகுளத்தில் தலையாரியாக பணிபுரியும் திசையன்விளை அருகே புலிமான்குளத்தை  சேர்ந்த வேல் என்பவரும் நேற்று காலை  பைக்கில் உவரியில் இருந்து கூடங்குளத்திற்கு கடற்கரை சாலை வழியாக  சென்றனர். கூடங்குளம் அருகே சென்ற போது மின்னல் வேகத்தில் பின்னால் …

Read More »

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 23–ந் தேதி தொடங்குகிறது

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது. சுடலை ஆண்டவர் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுடலை ஆண்டவர் கோவில்களில் ஒன்றாக திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் விளங்கி வருகிறது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 8 …

Read More »

தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய திட்டக்குழு ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்டு

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி ராதாபுரம், திசையன் விளை, நாங்குநேரி, சாத்தான் குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தை, கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தை நான்கு …

Read More »

திசையன்விளையில் அதிமுக தெருமுனை பிரசாரம்

திசையன்விளை பேரூராட்சியில் ரூ.5.1 கோடியில் ரோடுகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறைக்கு ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கவும், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கும் மற்றும் 4 ஆண்டு கால சாதனையை விளக்கியும் திசையன்விளை பஸ் நிலையம் முன்பு அதிமுக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரசு வக்கீல் பழனிசங்கர், நகர ஜெ பேரவை செயலாளர் ஜெயக்குமார், …

Read More »

செல்போனில் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி திருமணமான பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

திசையன்விளை நெல்லை மாவட்டம் திசையன்விளை நெடுஞ்சாலை தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முரளி (வயது 19). இவர் காமராஜர் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தனர். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் …

Read More »

உடன்குடி பள்ளி வளாகத்தில் பரிதாபம் பள்ளிக்கூட பஸ் மோதி சிறுமி பலி சாலை மறியல்–வாகனங்கள் உடைப்பு

உடன்குடி உடன்குடி பள்ளிக்கூட வளாகத்தில், பள்ளிக்கூட பஸ் மோதியதில் 4 வயது சிறுமி பலியானாள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வாகனங்களை உடைத்தனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– 4 வயது சிறுமி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் பஞ்சாயத்து மருதூர்கரையைச் சேர்ந்தவர், பட்டாணி செல்வன். இவர் தனது வீட்டின் முன் மளிகை கடை நடத்தி வருகிறார். மீன் …

Read More »

திசையன்விளையில் லாரிகளில் இருந்து விழும் கற்களினால் விபத்து ஏற்படும் அபாயம்

திசையன்விளை திசையன்விளையில் லாரிகளில் இருந்து விழும் கற்களினால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தூண்டில் வளைவு அமைக்கும் பணி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ராட்சத கற்கள் லாரியில் ஏற்றப்பட்டு திசையன்விளை பஜார் வழியாக உவரிக்கு கொண்டு …

Read More »

குட்டத்தில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை பறிப்பு

திசையன்விளை குட்டம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி சரஸ்வதி(50). இவர் வீட்டையொட்டி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் கடையில் இருந்த போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு வாலிபர்கள் தண்ணீர் பாக்கெட் கேட்டுள்ளனர். சரஸ்வதி எடுத்துக் கொடுத்த போது ஒருவர் அவர் அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐந்தேகால் பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் …

Read More »

கலாம் மறைவுக்கு அஞ்சலி திசையன்விளையில் மவுன ஊர்வலம்

திசையன்விளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து திசையன்விளையில் அனைத்து கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி ஜேம்ஸ்ரோடு, பேரூராட்சி அலுவலகம், மெயின்பஜார், பழைய பேரூந்து நிலைய ஜங்சன், போஸ்ட்ஆபீஸ், பால்கனி மருத்துவமனை ரோடு, பேரூந்து நிலையம், உடன்குடிரோடு வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அப்துல்கலாம் பற்றிய நினைவுகளுடன் …

Read More »