தட்டார்மடம் அருகே உள்ள மணி நகரை சேர்ந்தவர் முத்துராமபாண்டியன். இவரது மகன் கண்ணன். இவர் சாத்தான்குளம் ஒன்றிய பா.ம.க. துணை செயலாளராக உள்ளார். இருவரும் மணிநகர் மெயின் பஜாரில் கடை வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. அதனை பிச்சி குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். குத்தகை காலம் முடிந்ததும் மணிகண்டனிடம் இருந்து மீண்டும் தோட்டத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில் மணிகண்டன் மீண்டும் தோட்டத்தை …
Read More »பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி பிளஸ்–2 மாணவர் சாவு நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்
சனி, ஜூன் 06,2015 பரப்பாடியில் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி, பிளஸ்–2 மாணவர் இறந்தார். தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– பிளஸ்–2 மாணவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில், உடன்குடி சாலையில் எம்.எல். ஆஸ்பத்திரி தெரு சமீபம் ஆர்.டி.பி. காம்பவுண்டில் வசித்து வருபவர் லட்சுமணன். திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். …
Read More »பாஜ நிர்வாகிக்கு கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர் தூத்துக்குடி மாவட்ட பாஜ துணைத் தலைவராக உள்ளார். இவர் தன் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தட்டார்மடம், சாத்தான்குளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார். மேலும் அவரை கண்டித்து பாஜ சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ராபிசனுக்கும், செல்வராஜிக்கும் பிரச்னை …
Read More »அமைச்சர் மீது கள்ளத்தொடர்பு புகார்: உயர்நீதிமன்றக்கிளை தள்ளுபடி
ஆசிரியையுடனான தொடர்பால் அமைச்சர் சண்முகநாதன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரியும் தாக்கலான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தட்டார்மடம் இன்பராஜ் தாக்கல் செய்த மனு: பள்ளி ஆசிரியராக உள்ளேன். என் மனைவியாக இருந்தவர் லீமா ரோஸ் பள்ளி ஆசிரியை. சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், லீமா ரோஸ் இடையே தொடர்பு ஏற்பட்டது. விவாகரத்து பெற்றேன்.என் சொத்தில் லீமா ரோஸூக்குரிய பங்கை அவரது …
Read More »உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் விசாக திருவிழா கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
திங்கள் , ஜூன் 01,2015 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில், கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விசாக திருவிழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில். சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆண்டு தோறும் …
Read More »கருப்பட்டி தயாரிப்பு, விலை மற்றும் பயன்கள்
கருப்பட்டி விலை 1 கிலோ- 150/- ரூபாய் பயன்கள்: பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். …
Read More »திசையன்விளை பஸ் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டம்
புதன், மே 20,2015 திசையன்விளை செல்லும் பஸ் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் வரவில்லை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திசையன்விளை, சாத்தான்குளம், பேய்குளம், முனைஞ்சிப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களுக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முகூர்த்தநாள் என்பதால் வழக்கத்தைவிட, புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திசையன்விளைக்கு செல்லும் …
Read More »கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது
ராதாபுரம் வியாழன் , மே 14,2015: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் நேற்று முதல் மீண்டும் மின்பத்தி தொடங்கியது. கோளாறு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில், தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலாவது அணு உலையில் …
Read More »திசையன்விளையில் தொடர் மழை எதிரொலி: முருங்கைக்காய் விலை கிடு கிடு உயர்வு
திசையன்விளை, மே.15– திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள குரூஸ், அழகி, யாழ்பாணம், செடிரக முருங்கைகாய்கள் அமெரிக்கா, லண்டன், கனடா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு ஒரு கிலோ முருங்கைக்காய் அதிகபட்சமாக ரூ.48 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதிகவிலை கிடைக்கும் என கூடுதலாக முருங்கை பயிரிட்டு உள்ளனர். முருங்கைக்காய் அமோக விளைச்சல் …
Read More »திசையன்விளை சந்தையில் கருவாடு விலை உயர்வு
மீன்பிடி தடைகாலத்தால் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் கருவாடுகளின் விலை அதிகரித்துள்ளது. திசையன்விளையில் உள்ள கருவாடு சந்தையில் இருந்து கருவாடுகள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கருவாடுகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தைக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நன்றி :- புதிய தலைமுறை தொலைக்காட்சி
Read More »