ஜூலை 13, 2015 திசையன்விளை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே இட்டமொழி மெயின் பஜாரில் டாட்டா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள விஜய அச்சம்பாடு, பண்டாரபுரம், பெரும்பனை, அழகப்பபுரம், சங்கரன்குடியிருப்பு, புதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை இந்த ஏடிஎம் மையம் அருகில் செல்போன் கடை வைத்திருக்கும் அதே ஊரை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஆயிரம் ரூபாய் எடுத்தார். …
Read More »விபத்தில் முதியவர் காயம்; வாலிபர் கைது
ஜூலை 11, 2015 சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தைச் சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 65). இவர் அவரது சைக்கிளில் தட்டார்மடத்தில் இருந்து கொம்மடிக்கோட்டை நோக்கி சென்றார். அப்போது கொம்மடிக்கோட்டையில் இருந்து புத்தன்தருவைக்கு மோட்டார்சைக்கிளில் வந்த கிருஷ்ணன் மகன் நாதன் (19) என்பவர் அவரது சைக்கிளின் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த பிச்சைமணி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு …
Read More »திருமணம் ஆகாமல் கர்ப்பம்: நர்சின் குழந்தை கொன்று புதைப்பு – தாய் வெறிச்செயல்
ஜூலை 10, 2015 நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகள் சுகன்யா (வயது 23). நர்சிங் படித்துள்ள இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கர்ப்பமாக இருந்த இவரை கடந்த வாரம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது தாய் சேர்த்தார். அங்கு கடந்த 7–ந்தேதி சுகன்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சுக பிரசவத்தில் …
Read More »போலீசாரிடமிருந்து இருமுறை தப்பியவர் திருச்செந்தூரில் சிக்கினார்
ஜூலை 10, 2015 போலீசாரிடம் இருந்து இருமுறை தப்பி சென்ற மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர், திருச்செந்துார் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.திருச்செந்துார் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த இளைஞர் ஒருவரை விசாரித்தனர். விசாரணையில் தெரியவந்ததாவது: மதுரை நாமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் மகன் சத்தியகுமார் என்ற சிவா,23, என தெரியவந்தது. திருச்செந்துார் கோயில் …
Read More »‘பெற்றோருக்காக கல்யாணம், காதலுக்காக நீ…!’ -கைப்பந்து வீரரின் இரட்டை சவாரி ஆசை!
ஜூலை 9, 2015 சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா தன்னுடைய காதலனும், கைப்பந்து வீரரும், வங்கி மேலாளருமான நவீன் மீது சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜிடம் கொடுத்த புகார் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதற்கு காவல்துறை உயரதிகாரிகளின் தலையீடும், அரசியல் செல்வாக்கே காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பிரியங்காவுக்கு உதவிய துணை நடிகை இதுகுறித்து பிரியங்காவுக்கு உதவிய சமூக சேவகியும், துணை நடிகையுமான எமி கூறுகையில், “நவீன்- பிரியங்கா …
Read More »தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புக்கு உயிர்!
05, ஜூலை 2015 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அரசின் சாதனை பட்டியலில் சேர்க்கும் வகையில், தாமிரபரணி – -நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்; திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதுமான நீராதாரங்கள் இல்லை. எனவே, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கன்னடி யன் அணைக்கட்டை புனரமைத்து, அதன் கால்வாயை, …
Read More »வீராங்கனையை காதலித்து ஏமாற்றிய வங்கி அதிகாரி கைது
ஜூலை 3, 2015 பெங்களூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது26). சர்வதேச கைப்பந்து வீராங்கனையான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டக்கோட்டையை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப் (28) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இவரும் சர்வதேச கைப்பந்து வீரர். கடந்த 6 ஆண்டுகளாக நவீனும் பிரியங்காவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நவீன் தன்னை திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரியங்கா …
Read More »வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய முயற்சி கணவர் வீட்டில் பட்டதாரி பெண் கைக்குழந்தையுடன் தர்ணா
செவ்வாய், ஜூன் 30,2015 வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சித்ததால், கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தனது கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கணவன்–மனைவி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆர்.சி.நந்தன்குளத்தைச் சேர்ந்தவர், அந்தோணி ராயப்பன். அவருடைய மகன் அந்தோணி அமலன் (வயது 34). தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை அருகே உள்ள சின்னராணிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகள் ரோஸ்லின் (25). பட்டதாரி. அந்தோணி …
Read More »பழைய கார் விற்பனையாளரை கொல்ல முயற்சித்த த.மா.கா. பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை, இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் நிறுவனத்தில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் திடீரென அங்கு நின்ற 17 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சேர்மத்துரையை அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி …
Read More »திசையன்விளையில் பரபரப்பு பழைய கார் விற்பனையாளரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி 17 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு
திசையன்விளையில் பழைய கார் விற்பனையாளரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சித்தது. 17 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவம் திசையன்விளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– அரிவாள் வெட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கோடீசுவரரான இவர் நேற்று …
Read More »